இறைநாமத்தின் சிறப்பு
பயிரை ஊன்றிக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், "அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்?" என்று கேட்டார்கள். அதற்கவர்கள், "நான் எனக்காக ஒரு கன்றை ஊன்றுகிறேன்" என்றார்கள். "இதனை விட சிறந்த பயிரை உமக்கு நான் சொல்லித் தரவா?" என்று கேட்க, "சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள்.அப்போது நபி (ஸல்) அவர்கள்,
"ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்"
என்று கூறுவீராக! இவை ஒவ்வொன்றிற்கும் சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படும்" என்றார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : இப்னுமாஜா 3797)

No comments:
Post a Comment