Tuesday, January 31, 2012

ஹஜ்ஜின் புனிதமான நோக்கங்கள்

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்

லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்

அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து..

எல்லாப் புகழும் ஏக இறையோனாகிய வல்ல அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். சாந்தியும் சமாதானமும் சத்தியத் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தவர்கள், தோழர்கள், மற்றும் சத்தியத்தைப் பின்பற்றுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக..!


எல்லாம் வல்ல இறைவன் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்குக் கடமையாக்கி வைத்திருக்கின்ற அத்தனை வணக்க வழிபாடுகளும் ஒரு புனிதமான நோக்கத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. அவன் மொழிகின்ற கலிமாவான ஷஹாதத்தாக இருக்கட்டும், தொழுகையாக இருக்கட்டும், நோன்பாக இருக்கட்டும், ஸகாத் மற்றும் தான தர்மங்களாக இருக்கட்டும், வாழ்நாளில் ஒருமுறை வசதிவாய்க்கப்பட்டவர்களுக்காக கடமையாக்கப்பட்டிருக்கும் ஹஜ்ஜாக இருக்கட்டும்.., இவை அனைத்தும் ஒரு உயரிய நோக்கத்திற்காகவே கடமையாக்கப்பட்டிருக்கின்றன.

எவ்வாறு வானமும், பூமியும், அண்ட சராசரங்களும் இந்த பிரபஞ்ச வாழ்க்கைக்கான பங்களிப்பிற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றனவோ, அதனைப் போலவே மனிதனும், அவன் மீது இறைவன் கடமையாக்கி வைத்திருக்கின்ற வழிமுறைகளும் ஒரு உயரிய நோக்கத்தைக் கொண்டவையாக உள்ளன.

சூரியன் வெப்பத்தை வழங்குவதன் மூலம் இந்தப் பிரபஞ்சத்திற்கான தனது பங்களிப்பை வழங்க வேண்டும். இதில் தடைகள் ஏற்படுமென்றால், இந்த பிரபஞ்ச வாழ்வில் பல்வேறு தடைகளும், குழப்பங்களும், ஒழுங்கீனங்களும் ஏற்பட்டு விடும்.

அந்த வகையில் தான் இந்த பிரபஞ்சத்தின் பிரதான படைப்பாகிய மனிதனும்..! அவனுக்குரிய கடமைகளை அவன் முழுமையான நிறைவேற்றியாக வேண்டும். அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்குரிய வழிமுறைகளை இறைவன் வழங்கியிருக்கின்ற பிரகாரம் அவன் அதனை நிறைவேற்றியாக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றத் தவறும்பட்சத்தில், இந்தப் பூமியில் குழப்பங்களும், மாச்சரியங்களும் தலை விரித்தாடத் துவங்கும்.

எனவே, இந்த குழப்பமில்லாத வாழ்க்கைக்கு பயிற்றுவிக்கக் கூடிய பயிற்சிக் களமாகத் தான் இறைவன் கடமையாக்கி வைத்திருக்கின்ற ஒவ்வொரு கடமைகளும் அமைந்திருக்கின்றன. அதில் இந்த ஹஜ் என்னும் கடமையானது, மிகவும் உன்னதானதொரு வழிமுறையையும், முழுமையான பயிற்சியையும் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கக் கூடியதாக இருந்து கொண்டிருக்கின்றது.
இதில் ஓரிறைக் கொள்கை, இஸ்லாமிய குடும்ப அமைப்பு, பிரச்சாரப் பணி, தியாகம், பொறுமை, சகிப்புத் தன்மை, வாழ்க்கை முறைகள் போன்ற எண்ணற்ற அம்சங்கள் அடங்கி இருப்பதைக் காண முடியும்.

• ஹஜ்ஜின் வார்த்தைகள்
• இஹ்ராம்
• மினா, அரஃபா, முஸ்தலிஃபா
• பிரச்சாரப் பணிக்கான ஆயத்தப் பயிற்சி
• தியாகம்
• இஸ்லாமிய நிழலில் குழந்தை வளர்ப்பு
• குடும்பத்தலைவியின் ஒத்துழைப்பும், பிரச்சாரப் பணியும்
• கல்வியறிவு ஊட்டுதல்

ஹஜ்ஜின் வார்த்தைகள்

''லப்பைக்கல்லாஹும்ம லப்பைக் லப்பைக்க லாஷரீக்க லக்க லப்பைக் இன்னல் ஹம்த வந்நிஃமத லகவல் முல்க் லாஷரீகலக்""
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு குறிக்கோள் உண்டு. இந்த ஹஜ்ஜின் குறிக்கோள், ''இணை துணையற்ற வல்ல அல்லாஹ்விடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து விடுவது"" என்பதாகும்.
அதனைத் தான் மேலே உள்ள 'தல்பியா" என்ற சுலோகம் நமக்குக் கற்றுத் தருகின்றது. இந்த உலக வாழ்வில் எத்தனையோ முறை இறைவனுக்கு இணை வைக்கின்ற மாபாதகச் செயலில் நாம் இறங்கி விடுகின்றோம். எனக்கு இணை வைக்கும் தவறுக்கு மனிதர்கள் வருந்தி பச்சாதாபப்பட்டு என்னிடம் மன்னிப்புக் கேட்காதவரை அவனை மன்னிக்க மாட்டேன் என்று அல்லாஹ் உறுதிபடக் கூறி இருக்கும், அத்தகைய மாபாதகத்தை நமது வாழ்வின் நடைமுறைகளில் சர்வ சாதாரணமாச் செய்து விடுகின்றோம்.

அத்தகைய தவறுகளைக் களைவதற்கு முதற் பயிற்சியாக இந்த தல்பியா அமைந்து விடுகின்றது. இந்த தல்பியாவிலே இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவமான தவ்ஹீத் - ஏகத்துவக் கொள்கையின் மனம் வீசுகின்றது.

புகழும், ஆட்சியும், அதிகாரமும் உனக்கு மட்டும் தான் உரித்தானது, இந்த பிரபஞ்சத்தை அடக்கி ஆளும் வல்லமையும் உனக்கு மட்டும் தான் உண்டு. உனக்கு ஈடு இணை ஏதுமில்லை என்று பிரகடனப்படுத்தக் கூடியதொரு முழக்கமாக தல்பியா அமைந்து விடுகின்றது.
அதனைப் போலவே ஹஜ்ஜின் ஒவ்வொரு கிரியைகளின் பொழுதும், இந்த தவ்ஹீதின் சங்க நாதம் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தப்படுவதை நாம் உணரலாம்.
கறுப்புக் கல்லை நோக்கி கை உயர்த்தும் போது, 'அல்லாஹ{ அக்பர் - இறைவன் மிகப் பெரியவன்" என்றும்,

அதனை அடுத்து ஸபா மற்றும் மர்வா குன்றினில் ஏறும் பொழுது,
''அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹ{ அக்பர், லா இலாஹ இல்லலாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்க வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர், லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு அன்ஜஸ வஃதஹு வநசர அப்தஹு வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு"
என்று கூறக் கூடிய திக்ரும்,
அரஃபா தினத்திலே அதிகமதிகம் உச்சரிக்கக் கூடிய திக்ராக இருக்கக் கூடிய, 'லா இலாஹ இல்லாஹு" என்ற திக்ரும்,ஷைத்தானை நோக்கி கல் எறியக் கூடிய சந்தர்ப்பத்தில் முழக்கமிடக் கூடிய, 'அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன்" ஆகிய அனைத்தும், இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு சிறப்பானதொரு பயிற்சியை வழங்கி, இங்கு.. இந்த.. ஹஜ்ஜின் நடைமுறைகளில் எவ்வாறு தவ்ஹீதின் சங்கநாதம் கமழக் கமழ நீங்கள் உங்களது கடமையை நிறைவேற்றினீர்களோ.. அவ்வாறே உங்களது உலக நடைமுறை வாழ்வில் தவ்ஹீத் என்னும் ஓரிறைக் கொள்கையை முழுமையாகக் கடைபிடித்து வாழ்பவராக இருக்க வேண்டும் என்று நமக்கு பயிற்சி அளிக்கின்றது.
இவ்வாறு கூறும் பொழுது, நாம் என்ன சிலைகளையா வணங்குகின்றோம்.. என்றதொரு கேள்வி தொணிக்கின்றது. மிகப் பெரும் இணை வைப்பிலிருந்து இந்த சமுதாயம் மீண்டிருக்கலாம் அல்லது அதன் எச்சங்கள் நம்முடைய வாழ்க்கையின் போக்கில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்கலாம். அதனை இனங் கண்டு களைய வேண்டும். அதற்கு அடுத்ததாக, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்துச் சென்ற, சிறிய இணைவைப்பிலிருந்து இந்த சமுதாயம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும்.

• ஆசைகளுக்கும், இச்சைகளுக்கும் அடிபணிவது
• முன்னோர்களுக்கும், அவர்களது பழக்க வழக்கங்களுக்கும் அடிபணிவது
• ஆட்சி அதிகாரத்திற்கு அடிபணிவது

இவற்றை நம்முடைய மனப்பதிவுகளில் அசை போடும் பொழுது, இறைத்தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வாழ்க்கை நம் கண்முன் மனப்பதிவாக வலம் வர வேண்டும்.ஒரு கோயில் பூசாரிக் குடும்பத்தில், அதுவும் தலைமைப் பூசாரியின் மகனாகப் பிறந்த இப்ராஹீம் (அலை) அவர்கள், தனது தந்தைக்குப் பின் தனக்கு வரவிருக்கின்ற அந்த கௌரவமான பதவியையும் இறைவனது திருப்பொருத்தத்திற்காக உதறித் தள்ளி விடுகின்றார்கள். அவர்களைக் கொலை செய்யவும் அவரது தூதை நிராகரித்த மக்கள் முனைந்தார்கள். வாழ்ந்த நாட்டை விட்டும் துரத்தினார்கள். கொண்ட கொள்கையில் மாறாத இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், பதவிக்காகவும், பட்டத்திற்காகவும், முன்னோர்களுக்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டு இறைவனது கோபத்தை சம்பாதித்துக் கொள்ள அவர் துணியவில்லை என்பதையும், தான் ஏற்றுக் கொண்ட கொள்கையை வாழ வைப்பதற்காக நாட்டை விட்டும் கூட வெளியேறிய அவர்களின் தியாகத்தை நமக்கு இந்த ஹஜ் உணர்த்திக் காட்டுகின்றது.

இன்னும் முகஸ்துதி, பெருமை, தற்பெருமை, சூனியம், சகுணம், சாஸ்திரங்கள், ஜோஸியம், நான் என்ற மமதை இன்னும் இவை போன்ற சிறு இணைவைப்பிலிருந்தும் இந்த சமுதாயம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு இந்த மனித சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கான வழிமுறைகள் ஹஜ்ஜின் நோக்கமென்றால் அதில் மிகையில்லை.

இஹ்ராம்

ஹஜ்ஜின் பொழுது அணியக் கூடிய இஹ்ராமைப் பார்க்கின்றோம். உலக நடைமுறை வாழ்வில் எவ்வளவு பெரிய பணக்காரனாக அவன் இருந்தாலும், இஹ்ராம் என்னும் இரண்டு துண்டுத் துணிகளை அவன் அணிந்து விட்ட மாத்திரத்தில் அவனது ஆணவம், அகங்காரம், தான் என்னும் மமதை ஆகிய துற்குணங்கள் அவனை விட்டு அகன்று விட வேண்டும். அந்த இரண்டு துண்டுகள் அணிந்திருக்கின்ற நிலையில், அவனது ஆடம்பரங்கள், அலங்காரங்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டு, சாதாரண அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையோடு ஒன்றியதொரு வாழ்க்கைக்கு அதன் மூலம் ஒரு பயிற்சி அவனுக்குக் கிடைக்க வழி ஏற்படுகின்றது.

இந்த இரண்டு துணிகளோடு எத்தனை மனிதர்கள் உலா வந்து கொண்டிருக்கின்றார்கள். தனது அங்க அவயங்களை மறைப்பதற்கான முழுமையான உடை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்போர்களும், அந்த உடைக்காக ஜீவமரணப் போரட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றவர்கள் எத்தனை பேர் என்று நினைக்கும் பொழுதும், அவனுடைய உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் பகட்டும், ஆடம்பரமும் இடம் பெயர்ந்து விட வேண்டும். ஒரு மனிதன் இவ்வளவு சிக்கனமான உடை அலங்காரத்தோடும் தன்னுடைய வாழ்க்கையை நடத்தி விட முடியும் என்பதை இது உணர்த்தி நிற்கின்றது.
இது ஒன்றும் சாத்தியமற்றதொரு செயலல்ல. அத்தகையதொரு வாழ்க்கையை வாழ்ந்து வழிகாட்டி விட்டுச் சென்றிருக்கின்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவரது தோழர்களும், அவர்களைப் பின்பற்றி வாழ்ந்த நேர்வழி பெற்ற மக்களும் நமக்கு நற்சரித்திரச் சான்றுகளாய்த் திகழ்கின்றார்கள்.

மினா, அரஃபா, முஸ்தலிஃபா

இன்னும், ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு வாழ்விடம் தேடி, அதற்காக மிகப் பெரும் போராட்டத்தையே வாழ்க்கையில் சந்திக்கின்றான். அந்த வாழ்விடம் எவ்வாறெல்லாம் அமைய வேண்டும் என்று கற்பனை செய்த வண்ணம் இருக்கின்றான்.

ஆனால், மினாவில் வாழ்கின்ற அந்த நாட்களை சற்று எண்ணிப் பாருங்கள்..! அவரவருக்கு இறுதியாகக் கிடைக்கக் கூடிய 6 அடிக் குழியை ஞாபகப்படுத்தும் நிலப்பரப்பாக மினா திகழ்வதை அங்கு சென்றவர்கள் உணர்வார்கள். எவ்வளவு வசதி வாய்ப்புள்ளவராக இருப்பினும் சரியே, அவருக்கென அங்கு ஒதுக்கப்படுவது அவர் படுப்பதற்கு வசதியாக உள்ள இடம் மட்டுமேயாகும். இன்னும், மிகப் பெரிய மாட மாளிகைகளில் வாழ்ந்து வரக் கூடியவரது வாழ்க்கை கூட இந்த நாட்களில் சுருக்கப்பட்டு, இவ்வளவு சுருக்கமான இடத்திலும் கூட ஒரு மனிதன் தனது வாழ்வை செவ்வையாக நடத்த முடியும் என்பதையும், இன்னும் முஸ்தலிபாவில் தங்கக் கூடிய அந்த இரவில், வாழ வக்கற்ற இன்னும் தனக்கென ஒரு சொந்த இடமில்லாத ஏழையின் வாழ்க்கைப் போக்கை பண வசதி படைத்தவர்களுக்கு உணர்த்தக் கூடியதாகவும் இருக்கின்றது. முஸ்தலிபாவில் தங்கக் கூடிய அந்த இரவில், வெற்று வெளியில் தான் மக்கள் தங்களது அந்த இரவைக் கழிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். பஞ்சு மெத்தையில் படுத்துப் பழக்கப்பட்டவர்கள் கூட, அந்த இரவில் மணலில் படுத்து எழுந்திருக்கக் கூடியவராக இருப்பார்.

அரஃபாப் பெருவெளியானது அல்லாஹ் நாளை மறுமை நாளில் மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டப்படக் கூடிய தளமாக இருப்பதை நமக்கு உணர்த்துகின்றது. அத்துடன், இஸ்லாமிய பிரச்சாரப் பணிக்காக தன்னுடைய தோழர்களைத் தயார்படுத்திய தளமாகவும், உலக மனித உரிமை சாசனத்தை பிரகடனப்படுத்திய நாளை, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை நிகழ்த்தப்பட்ட இடமாகவும் அது காட்சியளிக்கின்றது.

இங்கு நின்று கொண்டு தான், இன்றுடன் அனைத்து அறியாமைக்காலப் பழக்க வழக்கங்களும் என்னுடைய காலடியில் போட்டு மிதிக்கப்பட்டு விட்டன, அழிக்கப்பட்டு விட்டன"" என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

பிரச்சாரப் பணிக்கான ஆயத்தப் பயிற்சி

வெறுமனே வந்தோம் கூடினோம், ஒரு மிகப் பெரிய சடங்கை நிறைவேற்றி விட்டோம் என்ற களிப்பில் செல்வதற்குக் கடமையாக்கப்பட்டதல்ல ஹஜ். மாறாக, எவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரையால் உந்தப்பட்ட அவர்களது தோழர்கள், தாங்கள் முகம் பார்த்த திசை நோக்கி பயணப்பட்ட, இந்த மார்க்கத்தை வாழ்விக்கப் புறப்பட்டார்களோ அதனைப் போலவே, அரஃபாவிலிருந்து கிளம்புகின்ற ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்க்கைப் போக்கையே, அழைப்புப் பணியாக மாற்றியமைத்துக் கொண்டு வாழ முயற்சிக்க வேண்டும்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் ஒரு அழகிய முன்மாதிரி இருக்கின்றது என்று திருமறைக் குர்ஆன் கூறுகின்றது. அந்த அழகிய முன்மாதிரி மிக்க வாழ்க்கைக்குச் சொந்தக் காரர்களாக முஸ்லிம்கள் மாற வேண்டும்.


ஐரோப்பா அஞ்ஞான இருளில் கிடந்த பொழுது இப்படி ஒரு கருத்தைச் சொல்வார்களாம். அதாவது, 'நாகரீமாக இரு என்றால், முஸ்லிமாக இரு" என்ற பொருள்படக் கூறுவார்களாம். ஆனால், இன்றைக்கு நாகரீகமாகவும், அழகிய முன்மாதிரியாகவும் வாழ்ந்து காட்டி மனித சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய முஸ்லிம்கள், பிற சமுதாயம் எள்ளி நகையாடும் அளவுக்கு, இகழப்படக் கூடிய அளவுக்கு இருப்பது வேதனைப்படக் கூடியது.

தியாகம்

ஹதிய் என்ற குர்பானி கொடுக்கும் பொழுது, இப்ராஹீம் (அலை) அவர்களது தியாகத்தையும், இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களது பொறுமையையும், அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனையே முற்றிலும் சார்ந்திருந்த தன்மையும் நம்முடைய கண் முன் வர வேண்டும்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தள்ளாத வயதில் மகனாகப் பிறந்தவர் தான் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். தவமிருந்த பெற்றெடுத்த ஆசை மைந்தனை பலி கொடுக்க வேண்டும் என்ற இறைக்கட்டளை வந்த பொழுது, அதனை நிறைவேற்றத் துணிந்த இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தியாகத்தை திருமறையின் வாயிலாக இவ்வாறு கூறுகின்றான் :

(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான், அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்"" என்று அவன் கூறினான். அதற்கு இப்ராஹீம்; ''என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)" எனக் கேட்டார். என் வாக்குறுதி (உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். (2:124)

மேலே உள்ள வசனத்தில் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது தியாகத்திற்குப் பகரமாக இறைவன் அவர்களை இந்த மனித சமுதாயத்திற்கு தலைவராக ஆக்குகின்றேன் என்று கூறிய பொழுது, தன்னை மட்டும் முற்படுத்திக் கொள்ள விரும்பாத, அந்த தலைமைப் பதவியைத் தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணங் கொள்ளாத இப்ராஹீம் (அலை) அவர்கள், எனது சந்ததிக்கும் அந்தப் பதவியை வழங்குவாயா.. என்று இறைவனிடம் முறையிடும் பாங்கு, ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் மிகச் சிறந்த உதாரணமாகும். தன்னை மட்டும் சிந்திக்காமல், தனது சந்ததியின் வாழ்வு, வளம், கொள்கை போன்றவற்றையும் பெற்றோர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தி நிற்கின்றது.

இஸ்லாமிய நிழலில் குழந்தை வளர்ப்பு

அதுமட்டுமல்ல, இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பொறுமை..! தந்தைக்கும் தனையனுக்கும் இடையே நடந்த உரையாடலின் பொழுது, தந்தை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்து, ''இறைவனது கட்டளையைக் குறித்து விளக்கி, இதற்கு உங்களது பதில் என்ன மகனே..!" என்று கலந்தாலோசனை செய்யும் விதம், தந்தை மற்றும் மகனது உறவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டும், குழந்தை வளர்ப்பு எவ்விதமாக இருக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.அதற்கு மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களது பதில், 'இறைவனது கட்டளை எதுவோ அதனைத் தயங்காமல் நிறைவேற்றுங்கள் தந்தையே.." என்பதாக இருக்கின்றது. அதுமட்டுமல்ல, தந்தையே.. கத்தியை நல்ல முறையில் தீட்டிக் கொள்ளுங்கள், இன்னும், உங்களது ஆடையில் எனது இரத்தம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள், அதன் மூலம் எனது தாய்க்கு மனக் கஷ்டத்தை அளித்து விடாதீர்கள் என்று கூறும் உளப் பாங்கில், அவர் வளர்ந்த மற்றும் வளர்க்கப்பட்ட விதம் பறைசாட்டப்படுகின்றது.

இது ஒவ்வொரு குடும்பத்தலைவனும் தங்களுடைய குழந்தைகளை எவ்வாறு மூத்தோர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கத்தோடு வளர்க்கப்பட வேண்டும் என்பதைக் கூறுகின்றது. இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு வாழக் கூடிய குழந்தைகளாக அந்தக் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும், இறைவனது கட்டளைகளை முழுமையாகப் பேணி வாழக் கூடியவைகளாகவும் அவை பரிணமிக்க வேண்டும் என்பதையும் நமக்கு இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) அவர்களது வாழ்வு அமைந்துள்ளது.

குடும்பத்தலைவியின் ஒத்துழைப்பும், பிரச்சாரப் பணியும்

இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் காலடி எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு ஆண் மகனுக்கும் அவனது குடும்பத் தலைவி உறுதுணையானவளாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுது தான், பிரச்சாரப் பணியில் எதிர்ப்படுகின்ற சவால்களின் மூலம் துவண்டு போய் வீட்டுக்கு வரும் கணவனுக்கு ஆறுதலான வார்த்தைகள் கிடைக்கும். இல்லையெனில், முரண்பாடுகள் முற்றி குடும்ப வாழ்வு சிதைந்து போவதற்குக் காரணமாகி விடும்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மனைவி அன்னை ஹாஜரா (அலை) அவர்களை மக்காவின் அளரவமற்ற பாலைப் பெருவெளியில் தனித்து விட்டு விட்டுச் செல்லும் பொழுது, தனது கணவரைப் பார்த்து இவ்வாறு கேட்கின்றார்கள் : 'இந்த பாலைப் பெருவெளில் தாயையும், தனையனையும் விட்டு விட்டுச் செல்கின்றீர்களே.. இது உங்களது முடிவா? அல்லது இறைவனது முடிவா?" எனும் பொழுது, 'இது இறைவனின் முடிவு" என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறி விட்டுச் செல்கின்றார்கள். அப்பொழுது, அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், பொறுமையுடன்.. இது இறைவனது முடிவாக இருக்குமென்றால், எங்களைப் பாதுகாக்க அவனே போதுமானவன்" என்று இறைவன் மீதே முழுமையாகச் சார்ந்திருக்கும் பண்பைப் பறை சாற்றுகின்றார்கள்.
மேலே உள்ள இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வாழ்க்கையைப் பார்க்கும் பொழுது, அவர் தனது பிரச்சாரப் பணிக்காக தனது குடும்பத்தை எவ்வாறு தயார் செய்து வைத்திருந்திருந்தார் என்பதைக் காண முடிகின்றது. எனவே, இன்றைக்கு ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமியப் பிரச்சாரகனாக மாற வேண்டிய சூழலில் தன்னை பிரச்சாரகனாக மாற்றியமைத்துக் கொள்ள முயற்சிக்கும் அதேவேளையில், தனது குடும்ப அங்கத்தவர்களையும் தனது பிரச்சாரத்திற்குரிய பக்க பலமாக மாற்றியமைக்க வேண்டியதும் அவசியமாகின்றது.இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் தனது ஆரம்ப காலப் பிரச்சாரப் பணிக்காலத்தில், இறைநிராகரிப்பாளர்களின் எதிர்ப்புக்களால் சோர்ந்து போய் வீட்டிற்கு வந்த பொழுதெல்லாம், அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தந்த ஆறுதல் வார்த்தைகள் தான் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு புது வலிமையை ஊட்டி, பிரச்சாரப் பணியில் கிடைத்த சோர்வை போக்கி புத்துயிர் ஊட்டின. இன்றைய உலகானது இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், ஒவ்வொரு பிரச்சாரகனும் தனது இல்லத்தை சோதனைகளைத் தாங்கும் வலிமை கொண்டவையாக மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்து கொண்டிருக்கின்றது.

இதனைத் தான் ஸஃபாவும், மர்வாவும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
பிரச்சாரப் பணிகளின் பொழுது, மனச் சோர்வு, எதிர்ப்புக்கள், உலக வசதி வாய்ப்புக்கள், சொந்த பந்தங்களின் ஆசைகள் போன்றவற்றின் மூலம் ஷைத்தான் மனிதனை வழிகெடுக்கும் பொழுதெல்லாம், அந்த ஷைத்தானை எந்தக் கல் கொண்டு மினாவில் எறிகின்றீர்களோ, அதே மன வலிமையுடன் - அல்லாஹ்வே மிகப் பெரியவன், அவனது திருப்தி ஒன்றே போதுமானது என்ற உயரிய எண்ணத்தை வரவழைத்துக் கொண்டு சத்தியத்திற்காகப் போராடக் கூடிய ஆத்மாக்களாக நம்மை மாற்றி அமைத்துக் கொள்வதற்கான உள வலிமைத் தரக் கூடியதாக 'கல் எறியும் நிகழ்ச்சி" நம்மை மாற்றியமைக்க வேண்டும்.

அடுத்ததாக, இஸ்லாமியப் பிரச்சாரப் பணி என்பது குறிப்பிட்ட எல்லையோடு முடிவடைந்து விடுவதில்லை. அதன் எல்லைக் கோடுகள் விரிவாகிக் கொண்டே இருக்க வேண்டும். குறுகிய நோக்கங்கள், இயக்க பேதங்கள், கருத்து முரண்பாடுகள் ஆகியவற்றைக் களைந்து முழு சமுதாய நல்வாழ்வுக்காக என்னும் அடிப்படையில் பிரச்சாரப் பணியின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை பிரச்சாரப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டதோடு நிறுத்திக் கொள்ளாமல், தனக்குப் பின் தனது சந்ததியையும் அதற்குத் தயார் செய்கின்றார்கள். இன்னும் மக்காவில் ஆரம்பித்த இந்த இஸ்லாமியப் பிரச்சாரப் புயல், முழு அரேபியாவிற்கும் பரவ வழி அமைக்கின்றார்கள். லூத் (அலை) அவர்களை ஜோர்டானுக்கும், இங்கிருந்து பாரசீகம், எகிப்து, ஈரானுக்குப் பிரச்சாரங்கள் சென்று பரவ வழிவகுக்கின்றார்கள். அடுத்ததாக இஸ்மாயீல் (அலை) அவர்களை ஹிஜாஸ் என்றழைக்கக் கூடிய மக்காவிலும், அடுத்து இஸ்ஹாக் (அலை) அவர்களை 'கன்ஆம்" என்ற பாலஸ்தீனத்திலும் நியமித்து இஸ்லாமியப் பிரச்சாரப் பணி முடுக்கி விடப்படுகின்றது.

இதில் மக்கா முழு உலக இஸ்லாமியப் பிரச்சாரப் பரவலுக்கான தலைமையிடமாக மாற்றம் பெறுகின்றது. அந்த தலைமையகத்தில் வருடம் ஒருமுறை வந்து கூடுவதன் மூலம், முஸ்லிம்கள் தங்களது பிரச்சாரப் பணிக்கான பயிற்சியையும், உத்வேகத்தையும் பெற்றுச் செல்லக் கடமையாக்கப்பட்டதே ஹஜ் ஆகும். ஹஜ் என்றாலே ''சந்தித்தல்"" என்ற பொருளாகும்.
இந்த சந்திப்பின் பொழுது நமக்குள் இருக்கின்ற கருத்து வேறுபாடுகள் களையப்பட வேண்டும். சகிப்புத்தன்மையும், விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கும் வளர வேண்டும். நடுநிலையைப் பேணக் கூடியவர்களாக ஒவ்வொருவரும் மாற வேண்டும்.

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்படப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (2:197)

கல்வியறிவு ஊட்டுதல்

பல சமூகச் சூழ்நிலைகளில் இருந்து மக்காவை நோக்கி வரக் கூடிய மக்களிடம், இஸ்லாத்தில் இல்லாத பல்வேறு நூதனச் செயல்கள் மலிந்து காணப்படுவதை நாம் காண முடியும். அவ்வாறு காணும் பொழுது, நயமாக அவர்களிடம் அதனை எடுத்துச் சொல்லி, அறியாத மக்களுக்கு இஸ்லாமியக் கல்வி அறிவை ஊட்ட வேண்டியது, அறிந்தோர்களின் கடமையாகும்.
இதற்காக, கல்வி அறிவு பெற்றோர் மார்க்கச் சட்டங்கள் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்து கொள்வதற்காக முயற்சிகளைச் செய்ய வேண்டும். தான் அறிந்தவற்றை அழகிய முறையில் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். இன்னும் முஸ்லிம்களை ஒருங்கிணைத்துச் செல்லக் கூடிய பக்குவம் பெற்றவர்களாக தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஹஜ்ஜின் பொழுது, தனக்கு மிக அருகில் இருக்கின்ற மாற்று தேச முஸ்லிம்களிடம் அளவளாவ முயற்சி செய்ய வேண்டும். அவர்களது வாழ்க்கை, மார்க்கம், அரசியல், பிரச்னைகள், தீர்வுக்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள் இதுபற்றிய கலந்துரையாடல் செய்ய வேண்டும். இவை யாவும் அழகிய விவேகத்துடன் நடத்தப்பட வேண்டும். மாறாக, தான் விரும்பும் இயக்கத்தின் கருத்துக்களை வலிந்து திணிக்கும் முயற்சி இருத்தல் கூடாது. இஸ்லாம், ஓரிறைக் கொள்கை, இஸ்லாமியப் பிரச்சாரம், இணைவைத்தல் போன்ற கருப் பொருளின் கீழ் சம்பாஷனைகள் அமைவது சிறந்தது.

ஆகவே, இஸ்லாமியப் பிரச்சாரப் பணிக்கான முழு உத்வேகமும் தேவைப்படுகின்ற இந்த கால கட்டத்தில் நமது இந்த ஹஜ்ஜுக் கடமையானது அதற்கான முழுப் பயிற்சியையும் தரக் கூடியதாக மாற்றம் பெற வல்ல இறைவன் நம் அனைவரும் பேரருள் புரிவானாக..! ஆமீன்.

இறைவன் நம் அனைவரது அமல்களையும் ஏற்றுக் கொண்டு, பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில், சுவனச் சோலையில் நுழையும் சிறப்பு மிக்க நல்லடியார்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாக..! ஆமீன்.

Monday, January 30, 2012

"அனாக்" களிடமிருந்து இறைவன் "மர்ஸத்"களை காப்பற்றுவானாக

இது ஓர் வரலாற்றுப்பொன்னேடு

நடுநிசி! மக்க மாநகர் வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. அன்று பவுர்ணமியாதலால் பட்டப் பகல்போல் நகரம் ஒளி வீசிக் கொண்டிருந்தது என்றாலும் ஆங்காங்கு இருந்த வீடுகள் நிழலுள் மூழ்கியும் நிழலைப் பரப்பியும் மவுனமொழி பேசின.

நான் என்னை ஒரு போர்வைக்குள் மறைத்துக் கொண்டும் நிழல்களுக்குள் ஒளித்துக் கொண்டும் சந்து பொந்துகளில் நடந்து சென்றேன். பின் முக்கிய வீதியொன்றில் முன்னேறி இலக்கை எட்டும் தூரத்தைக் கடந்து விட்டேன்.

குறைஷிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த போரில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த கூடாரங்களை நோக்கியே என் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. முஸ்லிம்கள் பலரும் மக்காவை விட்டு வெளியேறிய பின்னரும் நான் மக்காவிலேயே தங்கியிருப்பதற்குக் காரணம் இருந்தது.

கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் சிலரை இரவில் யாருக்கும் தெரியாமல் மீட்டு மதீனாவுக்குக் கொண்டு சேர்ப்பதே என் பணியாக இருந்தது. அதற்காகவே நான் நடுநிசியில் தன்னந்தனியாக குறைஷிகளின் கூடாரங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன்.
அன்று இரவு ஒரு முஸ்லிம் தோழரை மீட்பதாக வாக்குறுதி அளித்திருந்தேன். அவரும் எனக்காக கண் விழித்துக் காத்துக் கொண்டிருந்தார். முக்கிய வீதியில் சென்ற நான் எதிரில் ஆள் நடமாட்டம் தெரிய அருகிலிருந்த வீட்டின் நிழலுள் நிழலானேன்.

எதிரில் ஒர் உருவம் தென்பட்டது. அது நானிருந்த இடத்தைக் கடந்து சென்றபோது அது யாரெனப் பளிச்செனத் தெரிந்தது. அது ஒரு பெண் அவள் பெயர் அனாக். அவளை எனக்கு நன்றாகத் தெரியும். அவளையும் பலருக்குத் தெரியும். அவள் ஒரு பாலியல் தொழிலாளி!

அவளுக்கு நான் ஒரு வழமைச் சவாரி, ஒரு காலத்தில்; அவளைப் போன்றவர்களையெல்லாம் அப்பால் தள்ளி விட்டு இப்பால் வந்து நீண்ட நாட்களாகி விட்டன. கண்டபடி வாழ்ந்த காலங்களெல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்ட நிலையில் நான் இப்போது ஒர் உண்மை முஸ்லிம்.

அவள் என்னைப் பார்த்து விட்டால் எனக்கு இருவகை இழப்புகள் ஏற்படலாம். ஒன்று என் செயல் குறித்து அறிந்தால் அவள் மூலம் எதிரிகளின் தொல்லை வரலாம். பணி தடைபடலாம். இரண்டு, என்னை அவள் தன் திசைக்கு அழைக்கலாம். இரண்டுமே நடைபெறாமல் இறைவன் என்னைக் காப்பற்ற வேண்டும் என எண்ணிய நான் என்னையறியாமல் தும்மினேன்.

தும்மலைக் கேட்ட அனாக் திரும்பிப் பார்த்து "யாரது! இருளின் மடியில்...!" எனக் கேட்ட படி என்னை நோக்கி வந்தாள். அவளின் மடி என் நினைவுக்கு வந்தது .இறைவன் என்னை காப்பாற்றுவான். நான் பதில் பேசாமல் நின்றபடி போர்வையால் முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டேன்.

"எனக்குத் தெரியாதவர் மக்காவில் யாருமே இருக்க முடியாது... யார் நீ" எனக் கேட்டபடி அருகில் வந்து என் போர்வையை வேகமாக உருவினாள். என் முகம் இப்போது நன்றாக தெரிய வர, "மர்ஸத் நீங்களா? என் மனங்கவர்ந்தவர்களில் ஒருவரான நீங்கள் ஏன் என்னிடமிருந்து மறைய வேண்டும்?" எனக் கேட்டபடி அருகில் வந்து என் கையைப் பற்றினாள். நான் கைகளை உதறினேன்.
எனக்கு நா வறண்டது. என்ன பதில் கூறுவது என எனக்குத்தோன்றவில்லை. எச்சிலைக் கூட்டி விழுங்கினேன். கண்களிலும் நீர் தளும்பியது.

"மர்ஸத், ஏன் பேச மறுக்கிறீர்கள்? ஏன் இப்போது உங்கள் கரங்கள் உதறுகின்றன? மெல்லிய காற்று வீசும் சூழலில் எப்படி வந்தன உங்கள் முகத்தில் வியர்வைத் துளிகள்?"

"அனாக்! நான் இப்போது ஒரு முக்கிய வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன். அதனால் தான்..."
"என்ன வேலைக்காக தாங்கள் பதுங்கிப் பதுங்கி சென்று கொண்டிருக்கிறீர்கள்? என்னைக் கண்டு பேசுவதை விட அவ்வேலை என்ன அப்படி முக்கியத்துவம் வாய்ந்தது!"

"அதைப் பற்றி நான் இப்போது உன்னிடம் பேச முடியாது"

"ஏன்? என் மேல் நம்பிக்கையில்லையா உங்களுக்கு? திருடச் செல்கிறீர்களா? இல்லை, யாரையும் கொலை செய்யப் போகிறீர்களா? அப்படிப்பட்ட ஆளில்லையே நீங்கள்... என்னிடம் சொல்லுங்கள்; இல்லையேல் பரவயில்லை" என்ற அவளின் பேச்சில் என மனம் குளிர்ந்தது.

அனாக் விலை மகளாயிருந்தாலும் அவள் அநியாயத்துக்கு விலை போக மாட்டாள் என எண்ணி, "நான் குறைஷியர் சிறைப்பிடித்துள்ள முஸ்லிம் ஒருவரை மீட்கப் போய்க் கொண்டிருக்கிறேன்" என்ற உண்மையைச் சொன்னேன்.

"நல்ல வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். பரவாயில்லை. என்றாலும், இன்று நீங்கள் என்னோடு தங்கிச் செல்ல வேண்டும்" என அனாக் என்னிடம் வேண்டுகோள் விடுத்தாள்.

"அனாக்! நான் இப்போது முஸ்லிமாகி விட்டேன். எனவே, நான் உன் அழைப்பை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறேன். அல்லாஹ் தவறான பாலியல் உறவைத் தடை செய்துள்ளான். அது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இனியாவது தெரிந்து கொள். இனி நீ கூட அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு ஒரே மனிதருடன் வாழும் வாழ்க்கையை மேற்கொள்ளலாம்."

"அதெல்லாம் கதைக்குதவாத வீண் பேச்சு. வீடு கட்டிக் கொண்டு வாழ்வதெல்லாம் என்னைப் பொறுத்த வரை வீண் வேலை. எனக்குக் கூடாரமே போதும். அதனால் இப்போது நீங்கள் எனக்கு வேண்டும்."

"நீங்கள் என்னுடன் வர சம்மதிக்கவில்லையானால், நான் கூச்சலிட்டுக் குறைஷிகளிடம் உங்களைக் காட்டிக் கொடுத்து விடுவேன்" என அவள் என்னை எச்சரித்த போதே என் கால்கள் ஒட ஆரம்பித்தன. அவள் கத்தத் தொடங்கினாள்.

"கூடாரக்காரர்களே! நீங்கள் அடைத்து வைத்திருக்கும் கைதிகளை மீட்பதற்காக இதோ ஒருவர் வந்து விட்டுத் தப்பித்து ஒடுகிறார். அவரை விரைந்து பிடியுங்கள்" என அனாக் கூச்சலிட நான் சிட்டாகப் பறந்தேன்.

குதிகால் பிடரியில் பட ஒடிய நான் திரும்பிப் பார்த்தேன். எட்டுப் பேர் என்னைத் தொடர்ந்து ஒடி வந்து கொண்டிருந்தார்கள். அனாக் தூரத்தில் புள்ளியாய் நின்று கொண்டிருந்தாள்.

ஒடினேன்; ஒடினேன்.... ஒடிக் கொண்டே இருந்தேன். ஒடிக் கொண்டிருந்த நான் கந்தமா எனும் மலைக் குகையின் அடிவராத்தில் சென்று மறைந்து கொண்டேன். தேடி வந்த எட்டுப் பேரும் குகையின் மேல் நின்று எட்டுத் திக்கும் எட்டிப் பார்த்திருப்பர் போலும், பேச்சொலி கேட்டது.
பதுங்கியிருந்த என் தலை மேல் சொட்டுச் சொட்டாக நீர் வடிந்து வழிந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு வகை நாற்றம் மூக்கைத் துளைத்தது. அவை உதட்டில் பட உப்புக் கரித்தது. குகை மேலிருந்து அவர்கள் பெய்த சிறுநீர் என்னைப் பெருமைப்படுத்தியது போலும்! ஏதும் கூற முடியாத நிலையில் அமைதி காத்தேன்.

தேடி வந்தவர்கள் திரும்பிய பின் நீண்ட நேரங்கழித்து மூன்றாம் ஜாமத்தில் என் பணியை மீண்டும் தொடர்ந்தேன். பவுர்ணமி நிலவு கீழ் வானத்தில் போர்வை போர்த்திப் படுத்துக் கிடந்தது. முஸ்லிம்கள் சிறை வைக்கப்பட்டிருந்த கூடார மைதானத்தை அடைந்தேன்.

குறட்டை ஒலியே கேட்டது காவலிருந்த குறைஷிகள் குடித்திருந்த காரணத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நான் குறிப்பிட்ட கூடாரத்தை அடைந்தேன். நான் மீட்கச் சென்ற நபர் என்னை எதிர்பார்த்திருந்தார். அவர் கால்களில் காயம்: கைகளில் விலங்கு.

நான் குனிந்து அவரை என் முதுகில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டேன். கனத்த சரீரம் கொண்ட அவரை என்னால் நீண்ட தூரம் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. அவரின் விலங்கை உடைத் தெறிந்தேன். அவருக்கு ஒரளவு வலுகூடியது போலிருந்தது. என்றாலும் கால்களில் இருந்த காயங்களால் தரையில் காலுன்றி நடக்க முடியவில்லை.

மீண்டும் அவரைப் பேரீச்சை மூட்டையைச் சுமப்பது போல் சுமக்க ஆரம்பித்தேன். நகர எல்லையைத் தாண்டியபோது வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது. பறவைகள் கிறிச்சிட்டுக் கொண்டு பறக்க தூரத்தில் இடி முழக்கங்கள்.

என் கால்களும் கைகளும் வலுவிழந்தன. சுமையோடு விழுந்து விடுவேனோ எனப் பயம் வந்தது. அருகிலிருந்த ஈச்ச மரத்தோப்பில் தங்கியிருந்து விட்டு, மீண்டும் பயணத்தை இரவில் தொடரலாம் என எண்ணினேன். என் முதுகிலிருந்த நண்பரும் நான் எண்ணியதையே செயல்படுத்தச் சொன்னார்.
நண்பரைக் கிழே இறக்கி வைத்து விட்டு தோப்பை ஆராய்ந்தேன். அங்கே ஆளரவம் இல்லை. தோட்டத்தின் பின்புறம் ஒர் உயர்ந்த மணல் மேடு இருந்தது. அம்மணல் மேட்டின் மறைவில் நாங்கள் வீழ்ந்து கிடந்தோம். பசி அரை மயக்கம் அசதி எல்லாம் ஒன்று சேர்ந்து எங்களை நீண்ட தூக்கத்தில் ஆழ்த்தின. கண் விழித்துப் பார்த்த போது சூரியன் உச்சியில் இருந்தான்.

"மர்ஸத், உங்கள் உதவிக்கு நன்றி. நம்மிருவரையும் இஸ்லாமிய உறவு இணைத்ததோடு அல்லாஹ்வின் அருள் நமக்கு எவ்வளவு வலுவைத் தந்திருக்கிறது பார்த்தீர்களா? எனத் தோழர் உரைக்க, "ஆம் நண்பரே!" எனக் கூறி சபலங்களிலிருந்தும் நான் தப்பித்ததையும் அதற்கு அண்ணலாரின் வழிமுறைதான் காரணம் என்பதையும் கூற மாலை மதியமும் வீசுதென்றலும் வந்து சேர்ந்தன.

பசியும் அசதியும் வலியும் சென்ற இடம் தெரியவில்லை. நாங்கள் மதீனாவை நோக்கிச் செல்ல ஆயத்தமானோம்! (அபூதாவூத், நஸயீ ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சகோதரர் தாழை மதியவன் அவர்களால் எழுதப்பட்ட நடை)

உலகிலேயே ஆபத்தான இடம் எது? என்று ஒரு மாணவியிடம் ஒரு  நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட போது, இணையம் என்று பதில் சொன்னார் அதற்கு அரங்கில் நீண்ட நேரம் ஒலித்த கைத்தட்டல்கள். இணையத்தின் பாதிப்பை உண்மைப்படுத்தின.

இன்று பதிவுலகில் சகோதர, சகோதரி(மர்ஸத்)கள் அனைத்து சபலங்களையும் வென்று நல்ல விஷயங்களை எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் "அனாக்" குகள் ஆயிரகணக்கில் இணையத்தில் வழிகெடுக்க அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த "அனாக்" களிடமிருந்து இறைவன் "மர்ஸத்"களை காப்பற்றுவானாக.

source: http://valaiyukam.blogspot.com/

சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்

சம்பவம் 1:

தமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார், அவரது சகோதரி திருபணத்திற்கு, பிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு செல்லும்படி நிர்பந்தம் செய்திருக்கின்றார், அதற்கு அப்பெண் மருத்துவர் ‘நான் உடனடியாக என் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அங்கே பிரசவத்திற்காக ஒரு பெண் அட்மிட் ஆகியிருக்கின்றாள் நான் அங்கு சென்று சிசேரியன் செய்ய வேண்டும், நான் போக தாமதமானால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசம் ஆகிவிடும்’ என்றிருக்கின்றார். இதனைக்கேட்ட அந்த நண்பர் அதிர்ச்சியோடு அந்த பெண் டாக்டரை வழி அனுப்பிவைத்துவிட்டார்.



சம்பவம் 2:

தஞ்சையிலுள்ள எனது ‘தி ஹெல்த் ரிசோட்’ மருத்துவமனைக்கு, திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையை நிறுவிய டாக்டரும் அவருடைய சக நண்பர்; டாக்டரும் வந்திருந்தனர். நான் அவர்களிடத்தில் சீன மருத்துவத்தின் சிறப்புக்களை விளக்கி சொன்னபோது அதனை ஆச்சரியத்தோடு கேட்டு வியந்தார்கள், வந்திருந்த மற்ற டாக்டர் கூறினார் இதை இறைவன் உலகக்கு வழங்கிய மருத்துவமாகத்தான் இருக்க முடியும், மனிதனால் உருவாக்கியிருக்க முடியாது என்று சொல்லி வியந்தார். பிறகு சுகப்பிரசவத்திற்கான எளிய முறைகள் என்னவென்பதை விளக்கினேன், இதைக் கேட்டவுடன் டாக்டர் அவர்கள் தன் உடன் வந்திருந்த சக டாக்டரிடம் நீங்கள் உங்கள் மனைவியிடம் இதையெல்லாம் சொல்லி கொடுங்கள், ஆனால் சிசேரியனே செய்ய சொல்லுங்கள் அப்போதுதான் அதிக வருமானம் கிடைக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது உடன் வந்திருந்த டாக்டரின் மனைவி (Obstetric Gynaecologist) பிரசவ சம்பந்தமான படிப்பு படித்த பெண் டாக்டர் என்று, மேற்சொன்ன சம்பவங்கள் சில கசப்பான உண்மைகளை நமக்கு உணர்த்தும்.



சுமார் 30, 40 வயது நிரம்பிய பலரை விசாரித்து பாருங்கள், அவர்கள் பெரும்பாலும் சுகப்பிரசவம் ஆனவர்களாகவும் அதிலும் வீட்டிலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். வீட்டிலேயே பிறந்த பலருக்கு, அவர்கள் பிரசவத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமது அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே! சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள். இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்(?), வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்?

உலகெங்கும் உள்ள பலக் கோடிக்கணக்கான உயிரினங்கள் சுகப்பிரசவத்திலேயே பிறக்கின்றன, சிறிய பூச்சியிருந்து பெரிய யானை போன்ற மிருகம் வரை சுகப்பிரசவம் ஏற்படுகின்றபோது மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? டாக்டர்கள் தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்காக ஒத்துழைக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அங்குள்ள அதிகம் படித்த டாக்டர்கள் கர்ப்பிணியின் உறவினரிடம் நிலைமை மோசமாக இருக்கின்றது, சிசேரியன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ன சொல்கிறீர்கள்? என்று மிரட்டும் போது சிசேரியனுக்கு சம்பதிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.



டாக்டர்களும் வந்த கணவர் அல்லது உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு சட்ட பாதுகாப்போடு சிசேரியன் செய்து தங்களது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். சட்டம் ஓர் இருட்டறை என்பது இந்த பிரசவ அறைக்கும் பொருந்தும், பிறந்தாலும் இறந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது! காரணம் நாம்தான் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோமே.



அப்படியானால் சிசேரியன் தேவையே இல்லையா? என்று கேட்டால் அதற்கு பதில் இடுப்பு எலும்பு யாருக்கு பிறவியிலேயே மிக குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் தேவைப்படும். இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் ஏற்படும், சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் தேவைபடலாம். மற்றபடி எல்லோரும் சுகப்பிரசவம் ஆகக் கூடியவர்களே. தற்போது டாக்டர்கள் தரும் தேவையில்லாத மருந்துகளும் வேறு சில காரணங்களும் சுகபிரசவத்தையே மாற்றுகின்றன

.

தேவையில்லாத இரசாயன பொருட்கள்:

கர்ப்பம் ஆனவுடன் டாக்டர்கள் கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத்தன்மையை மாற்றிவிடுகின்றது. இரும்புச்சத்து மாத்திரைகள் சுகப்பிரசவத்திற்கு முதல் எதிரி, தேவையில்லாமல் கண்ட சத்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றார்கள், இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது அவற்றை இவர்கள் சொல்லுவதில்லை.

கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்) இயற்கையாக பெரும் முறைகள்

கால்சியம் மாத்திரைகள் பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி, இறைச்சி



இரும்புச் சத்து மாத்திரைகள் பேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக்கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய், உருளைக்கிழங்கு, கருவேப்பிலை





அயோடின் மீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள், பழங்கள்

குளோரின் உப்பு, பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம்.

பாஸ்பரஸ் பால், மோர், முட்டை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள்





மக்னீசியம் பீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள்

பொட்டாசியம் வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள்

சோடியம் இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன

குரோமியம், செலினியம், மாங்கனீஸ் எல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது.



விட்டமின் ஏ (ரெட்டினால்) மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம்



விட்டமின் டீ (கால்சிடெரால்) கொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி



விட்டமின் ஈ (டோகோபெரால்) தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி



விட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்) புதிய பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய்



விட்டமின் பி 1 (தயாமின்) கைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல்லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு



விட்டமின் பி 2 (ரிபோபிளேவின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானியங்கள்



விட்டமின் பி 3 (நியாசின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை



விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்) ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை)

விட்டமின் போலிக் ஆசிட் ஈரல், முட்டை, கீரைகள்



விட்டமின் பி 12 (சயனகாபாலமைன்) ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12 கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை



விட்டமின் சி (அஸ்கார்பிக் ஆசிட்) நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சைநிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி



சவுதி அரேபியாவில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த எகிப்து நாட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவரின் பெண் மருத்துவர் எழுதிக் கொடுத்த இரும்புசத்து மாத்திரைகளை எல்லாம் நிறுத்திவிட செல்லிவிட்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட சொன்னேன். மீண்டும் அந்த பெண் அவரின் பெண் மருத்துவரை சந்தித்தபோது இந்த பேரீச்சம்பழம் விஷயத்தை கூறியிருக்கின்றார்;, அதற்கு அந்த பெண் டாக்டர் 3 பழத்திற்கு மேல் அதிகம் சாப்பிடாதே அது ஆபத்து என்று கூறியிருக்கின்றார், இதனை அந்த எகிப்து நாட்டு பெண் என்னை மீண்டும் சந்தித்தபோது கூறினார்.



தேவையற்ற கட்டுபாடுகள்:

கர்ப்பம் அடைந்தவுடன் எப்போதும் இருப்பது போல் முடிந்த வேலைகளை செய்தாலே போதுமானது, சில டாக்டர்கள் தேவையில்லாமல் கட்டுபாடுகளை விதிப்பது சுகப்பிரசவத்தை பாதிக்கிக்றது. வேலைகள் செய்ய வேண்டாம் என்பது படுக்கையில் அதிகம் ஓய்வெடுக்க சொல்லுவது இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கூறி மனரீதியாக அச்சம் கொண்ட நோயாளிகளாக மாற்றிவிடுகின்றார்கள். கிராமங்களில் நாம் பார்த்திருப்போம், கர்ப்பிணி பெண்கள் தலையிலும், இடுப்பிலும் தண்ணீர் சுமந்து செல்வதையும், எத்தனையோ மலைப் பகுதிகளில் பெண்கள் விறகு வெட்டி எடுப்பதையும் அதனை மாலை நேரங்களில் விற்பதற்கு தலையில் சுமந்து எடுத்துச் செல்வதையும். சந்தோஷமான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு எல்லாம் சுகப்பிரசவம்தான்! காரணம் புரிகின்றதா?

திட்டமிட்ட சதியா?



பல வருடங்களாக பலதரப்பட்ட மக்களிடம் இந்த விஷயம் பேசபட்டு வருகின்றது, மக்கள் தொகையினை கட்டுபடுத்துவதற்காக இவ்வாறு சிசேரியன் செய்கின்றார்கள் என்று, இரண்டாவது முறை சிசேரியன் செய்யும் போதே குடும்பக் கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள், அவர்களுக்கு சில தவறான ஆலோசனைகளை கூறி, அதிகப்பட்சம் மூன்று சிசேரியன் வரை செய்கின்றார்கள், அதற்கு மேல் சிசேரியன் செய்தால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி கட்டாய குடும்ப கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள்.



சிசேரியன் மோசடிகள்

அதிகபட்சம் மூன்று சிசேரியன் மட்டுமே செய்ய முடியும் என்பதை பல டாக்டர்களும் கிளிபிள்ளை சொல்வதை போல் சொல்வார்கள், நம்நாட்டில் சுய அறிவை அடகுவைத்து மனப்பாடம் செய்து மருத்துவம் பார்ப்பவர்களிடம் வேறு என்ன பதிலை எதிர்பாக்க முடியும்?.



உண்மை தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். சவுதி அரேபியாவில் நான் பணிபுரியும் மெடிக்கல் கன்சல்டன்ட் மருத்துவமனைக்கு டிரீட்மெண்டுக்காக சவுதி பெண்மணி வந்திருந்தார், அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அவரின் உடல் தழும்புகளை வைத்து சில கேள்விகள் கேட்டேன், அதற்கு அவர் ஐந்து சிசேரியனகள்; செய்திருப்பதாக கூறினார், இதை கேட்டவுடன் ஆச்சரியம் அடைந்தேன். என் காதிலும் பல வருடங்களாக மூன்று சிசேரியன்களுக்கு மேல் செய்ய முடியாது என்ற புளித்துபோன வார்த்தைகளை கேட்டு பழகி போனதால் இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை கொடுத்ததில் வியப்பில்லை.



அந்த பெண்மணி சிகிச்சை முடிந்து போன பிறகு நான் உடனே என் மருத்துவமனையிலிருக்கும் பாலஸ்த்தீனைச் நாட்டைச் சேர்ந்த லேடி டாக்டர் திருமதி மனால் என்பரின் அறைக்கு சென்று அவரிடம் ‘ஆச்சரியமான செய்தி ஐந்து சிசேரியன் செய்த சவுதி பெண்மணிக்கு சிகிச்சை அளித்துவிட்டு வருகின்றேன்’ என்றேன்.



அவர் உடனே இதில் என்ன ஆச்சரியம் உங்களுக்கு ஒன்பது சிசேரியன் செய்த பெண்மணியை காட்டவா? என்றதும் நான் வியந்தே போனேன், உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அதேபோல் முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது. சிசேரியன் செய்த பிறகும் அதற்கு அடுத்து சுகபிரசவத்திற்கு எவ்வளவோ வாய்ப்பிருக்கின்றது, எத்தனையோ பேருக்கு இதுபோல் குழந்தை பிறந்திருக்கின்றது.



தேவையில்லாத மருத்துவ செயல்கள்:

விஞ்ஞான வளர்ச்சியை தேவைப்பட்டால் தேவைக்கேற்று பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இன்றோ அவைகளை பயன்படுத்துவது கட்டாய நடைமுறையாகிவிட்டது.

உதாரணத்திற்கு ஸ்கேன் எடுப்பதை சொல்லலாம். நகர்புறங்களில் ஸ்கேன் எடுக்காத கர்ப்பிணி பெண்கள் கிடையாது என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது, இதனால் தேவையில்லாத பொருளாதார நஷ்டம். தாயிக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத ஸ்கேன், டெஸ்டுகள், மருந்துகளை தவிர்ப்பதே சுகப்பிரசவத்தை எளிதாக்கும்.



சிசேரியன் செய்வதால் உண்டாகும் நோய்கள்:

சிசேரியன் செய்யும்போது உடலில் எந்த இடத்தில் ஆப்ரேசன் செய்கின்றார்களோ அதற்கேற்றார்போல் உடலில் புதிய பிரச்சனைகள், பதிய நோய்கள் உண்டாகும்.

தொப்புளிலிருந்து நேர் கீழ்நோக்கி செய்யப்படும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-

மாதவிடாய் கோளாறுகள் (Irregular Menstruction) வெள்ளைப்படுதல் (Leokorrhea) அடிக்கடி நிறுநீர் போகுதல், சிறுநீர் கசிவு, படியேறும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் வெளியேறுதல், கர்பப்பை இறங்குதல், அடிவயிறு வீங்கி போகுதல்.



தொப்புளிலிருந்து 0,5,2,4 இஞ்சு தூரத்தில் வலது அல்லது இடது பக்கம் நேர்கீழ் செய்ய்ப்டும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-



வயிற்றுவலி, அதிகமான மாதவிடாய், குடல் இறக்கம், கட்டிகள் உருவாகுதல், கற்பபை இறங்குதல், சீதபேதி, சிறுநீரக நோய்கள் அதிகமான வெள்ளைப்படுதல், வயிற்று போக்கு, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், குடல் வீக்கம், செரிமான கோளாறு, விலாவலி, தொப்புளிலிருந்து கீழ்பக்கம் இடமிருந்து வலமாக சிசேரியன் செய்யும்பொது மேலே கூறிய இரண்டு பிரிவுகளில் உள்ள நோய்களும் வர வாய்ப்பிருக்கின்றது.



சிசேரியன் செய்த இடத்தை பொருத்து நோய்கள் வரும், இதனால் பல பெண்கள் வாழ்வில் முழு ஆரோக்கியமும் தலைகீழாக மாறிவிடுகின்றது



சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்?:

கர்ப்பமானவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிரிருக்கின்றீர்களோ அதை செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் சாப்பிடும் தேவையில்லாத இரசாயன டானிக்குகள், விட்டமின் மாத்திரைகள் வேறு சில தேவையில்லாத மாத்திரைகள், அவசியமில்லா ஓய்வுகள், வேலை செய்யமல் இருப்பது, அவசியமில்லாத ஸ்கேன், அர்த்தமற்ற பரிசோதனைகள் இவற்றை முதலில் நிறுத்துங்கள்.



கர்ப்பமாக இருக்கும் நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் எப்படி இருப்பீர்களோ? ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோ? அதே போன்று இயற்கையான காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிட்டு தங்களால் இயன்ற வேலைகளை செய்து வந்தாலே போதும் உங்களுக்கு சுகப்பிரசவம்தான்.



ஆதிவாசிகள், குக்கிராமத்தில் வாழும் பெண்கள் இதுபோல பல கோடிக்கணக்கான மக்களும் மருந்து மாத்திரையின்றி இயற்கையான முறையில் சுகமான வாழ்க்கை வாழ்கின்றார்கள், சுகப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஸ்கேன், விட்டமின் மாத்திரை, டானிக், டெஸ்டு இவையெல்லாம் என்னவென்றே தெரியாது.

இனிப்பு நீரும் இரத்த அழுத்தமும்:



கர்ப்பமாகும் போது ஆரோக்கியமாகயிருந்து அதன் பிறகு தங்கள் உடலில் சர்க்கரை (Diabetic) அதிகமாகியிருக்குமானால் அதற்காக கவலைபட தேவையில்லை, பிரசவம் ஆனவுடன் அது இயல்பு (Normal) நிலைக்கு வந்து விடும். அதேபோல் இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்குமானால் அதற்காக பயப்பட தேவையில்லை, உடலில் எங்கோ பிரச்சனையிருக்கின்றது, அதனை சரிசெய்யவே இரத்த அழுத்தம் உண்டாயிருக்கின்றது. இது தேவையான இரத்த அழுத்தம். சம்பந்தப்பட்ட பிரச்சனை உடலில் சரியானவுடன் இரத்த அழுத்தமும் நார்மல் ஆகிவிடும், சரி செய்ய வேண்டியது உடல் பிரச்சனைகளை இரத்த அழுத்தத்தை அல்ல.



வலி இல்லா சுகப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள்:

கால் சுண்டுவிரலில் வெளிபக்க ஓரத்தில் நகமும் சதையும் சேருமிடத்தில் கைவிரலினால் அழுத்தி தேய்த்து (மஸாஜ்) விட வேண்டும், பிரசவ நேரம் நெருங்கியவுடன் இதை செய்ய வேண்டும். குழந்தை இக்கட்டான நிலையில் இருந்தால் கூட இதை செய்தால் குழந்தையின் நிலை பிரசவத்திற்கேற்ப சரியாகி சுகப்பிரசவமாகிவிடும். சாதாரண நிலையில் 1 அல்லது 2 நிமிடம் கசக்கி விட்டாலே போதும், பிரசவம் சிரமம் என்று தெரிந்தால் அடிக்கடியும் செய்துவிடலாம். பிரசவ நேரத்தில்தான் இதை செய்ய வேண்டும் மற்ற நேரத்தில் இதை செய்தால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும்.



பிரசவ நேரத்தில் வலி அதிகமாக தெரியமலிருக்க வெளிப்புற கணுக்கால் மூட்டு எலும்பின் மத்திய பாகத்திற்கும் குதிகால் நரம்புக்கும் இடைப்பட்ட பாகத்தின் மத்தியில் உள்ள பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும் .



கர்ப்பத்திலிருந்து குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க:

கணவன், மனைவிக்கு சாதாரண நோய்களோ அல்லது தீராத நோய்களோயிருந்தால் அது கர்பத்திலிருக்கும் குழந்தைக்கு பரவாமல் தடுக்கும் சிகிச்சை சீன மருத்துவத்தில்தான் இருக்கின்றது. படத்தில் உள்ள குறிபபிட்ட இடத்தில் 3வது மாதத்தில் ஒரு முறை, 6வது மாத்தில் ஒருமுறை விரலால் லேசாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெற்றோர்களின் நோய்கள் குழந்தைக்கு பரவாமல் காப்பாற்றிவிடலாம். உட்புற கணுக்கால் மூட்டுக்கம் குதிகால் எலும்புக்கும் இடையில் உள்ள மத்திய பகுதியிலிருந்து நேர் மேலே உங்கள் ஆட்காட்டி விரல் அளவுபடி 5வது இஞ்ச் (cun) அந்த இடம் அமைந்துள்ளது (பார்க்க படம் ).



ஓர் உண்மையை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள், கர்ப்பமாகும் யாரும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் இப்படி வேண்டும், காது இப்படி வேண்டும், கை இப்படி வேண்டும், முகம் இப்படி வேண்டும் என்று யாரும் முயற்சி செய்வதும் இல்லை, அதற்காக யாரும் இறைவனுக்கு யோசனை சொல்வதும் இல்லை (நவூதுபில்லாஹ்), எல்லாம் இறையருளால் இயற்கையாக நலமாக அமைகின்றது. அதுபோலவே பிரசவமும் சுகமாக அமையும், தேவையில்லாத தொல்லைகள், மருந்துகள் கொடுக்கமலிருந்தாலே போதுமானது. எனவே நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நம்மையும் நம் சந்ததிகளையும் மருந்துகள் மாத்திரைகள் என்னும் கொடிய இரசாயன விஷங்களிலிருந்து காப்பாற்ற முயற்சிப்போம், அதற்காக பாடுபடுவோம்..வெற்றி பெறுவோம்;..இன்ஷா அல்லாஹ்..



டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).









Sunday, January 29, 2012

இறைநம்பிக்கை


இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்! நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதியாவான். (அல்குர்ஆன் 2:208)
ஈடிணையற்ற அருட்கொடை

மனிதன் தன் வாழ்வில் அனுபவிக்கும் அருட்கொடைதான் எத்தனை! எத்தனை!  

அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளை கணக்கிட்டால் அதனை எண்ணிலடக்க முடியாது. (அல்குர்ஆன் 14:34)

ஒரு முஸ்லிம் பெற்றுள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளில் ஈடிணையற்றது அவன் பெற்றுள்ள ஈமான்தான். இவ்வுலக வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்த ஒருவரிடம் ஈமானுடன் அதற்குரிய செயல் பாடுகளும் இருப்பின் நிச்சயமாக அவர் ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார். இவ்வுலகில் சகல வசதிகளுடன் வாழும் ஒருவனுக்கு ஈமானும் அதற்குரிய செயல்பாடுகளும் இல்லையெனில் நிச்சயமாக அவன் ஈருலகிலும் தோல்வி அடைந்துவிட்டான்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:


லாயிலாஹ இல்லல்லாஹ் என அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்பார்த்துக் கூறுபவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிட்டான். (அறிவிப்பவர்: இத்பான்(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

ஈமான் முழுமையடைவது எப்போது?

ஈமான் என்பது மனித வாழ்வின் அனைத்துத் துறைகளையும் சூழ்ந்து நிற்கும் வாழ்க்கைத் திட்டத்தின் பெயராகும். ஏகத்துவக் கொள்கை என்பது ஈமானின் நுழைவாயில். அதனுள் நுழைந்த பிறகு அதில் கடக்க வேண்டிய எத்தனையோ கட்டங்கள்!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஈமானிற்கு எழுபதிற்கும் அதிகமாக கிளைகள் உள்ளன. அதில் முதன்மையானது லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதாகும். அதில் இறுதியானது துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது. வெட்கமும் ஈமானில் ஒரு பகுதியாகும். (நூல்: முஸ்லிம்)

எழுபதிற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட மகத்தான ஈமான், மனித வாழ்வின் எந்தத் துறையையும் விட்டுவைக்காமல் சூழ்ந்துள்ளது. எனவே முழு வாழ்வையும் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் ஈமானின் வழி காட்டுதலுடன் கழிக்கும் மனிதன் மட்டுமே ஈமானில் முழுமையடைகிறான். வாழ்வில் அனைத்துத் துறையிலும் மிளிர்ந்திடும் ஈமான் அம்மனிதனின் வாழ்க்கையையே வணக்கமாக மாற்றிவிடுகிறது.

ஆனால் நமது சமுதாயத்தில் ஏகத்துவக் கொள்கையை ஏற்று, தனக்கு ஓர் இஸ்லாமியப் பெயரையும் சூட்டிக்கொண்டதோடு ஈமான் முழுமை அடைந்துவிட்டது என திருப்தியடைபவர் ஒருபுறம். நான் தொழுவேன், நோன்பு நோற்பேன், ஆனால் வரதட்சணை வாங்கிக் கொள்வேன், என்னுடைய தொழிலில் வட்டித் தொடர்பிருக்கும் என சில கடமைகளைப் பேணி, பல கடமைகளை புறக் கணிப்பவர் மற்றொருபுறம், ரமலான்மாதத்தில் மட்டும் பள்ளிவாயிலுடன் தொடர்பு வைத்து, அதற்குப் பிறகு பள்ளி செல்ல அடுத்த ரமலானை எதிர் பார்த்திருக்கும் கூட்டத்தினரோ உலகெங்கிலும் ஏராளம். இவ்வகையினர் மார்க்கத்தைப் பின்பற்றுவதாக எண்ணி, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு, பெயர் தாங்கி முஸ்லிமாக வாழ்வது மிக வருத்தத்திற்குரியது.
ஈமானின் பயன்கள்

முழுமையடைந்த ஈமானின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் பல உள்ளன. அவை அம்மனிதனோடு மட்டும் நின்றுவிடாது பிறரையும் சென்றடைகின்றன.  

அல்லாஹ் கூறுகிறான்:

(லாயிலாஹ இல்லல்லாஹ் எனும்)நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் கூறும் உதாரணத்தை (நபியே!)நீர் பார்க்கவில்லையா? அது நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் பூமியில் ஆழப்பதிந்தும் அதன் கிளைகள் வானளாவியும் இருக்கின்றன. அது தன் இரட்சகனின் அனுமதி கொண்டு ஒவ்வொரு நேரத்திலும் கனிகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. (அல்குர்ஆன் 14:24,25)

ஏகத்துவக் கொள்கையை உள்ளத்தில் ஆழப்பதித்து, அதை வாழ்வின் அனைத்துத் துறையிலும் வெளிப்படுத்தும் மனிதன் காய்த்துக் குலுங்கும் பயனுள்ள மரத்தைப் போன்றவன் என அல்லாஹ் கூறும் உவமையைக் கவனித்தீர்களா!

அது மட்டுமல்ல! அம்மனிதர் மரணிக்கும் போது மலக்குகள் அவரிடம் உரையாடுவதைக் கேளுங்கள்!
நிச்சயமாக எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் எனக் கூறி, அதில் உறுதியாக நிலைத்து நின்றவர்கள் மீது(அவர்களின் மரண வேளையில்)மலக்குகள் இறங்கி, நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கச் சுபச்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்! நாங்கள் உங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள். அ(ச்சுவனத்)தில் உங்கள் மனம் விரும்பியவை உங்களுக்குண்டு. அதில் நீங்கள் தேடுபவை உங்களுக்குண்டு. மிகவும் மன்னிப்பவனான, கிருபையுடையோனிடமிருந்துள்ள விருந்தாக (அச்சுவனத்தைப்)பெற்றுக் கொள்வீர்கள் என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 41:30,32)

இந்நிலையில் அவர் தன்வாழ்வின் இறுதி வார்த்தையாக லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற ஏகத்துவக் கலிமாவுடன் இவ்வுலகிற்கு விடைதரும் பாக்கியத்தைப் பெறுகிறார்.

குவளையிலிருந்து ஊற்றப்படும் தண்ணீர் போல் மிக எளிதாக அவரின் உயிரை எடுத்து சொர்க்கக் கம்பளத்தில் வைத்து மலக்குகள் எடுத்துச் செல்ல, இவரின் பிரிவால் நல்லோர்கள் கண்ணீர் வடித்து துக்கத்தில் ஆழ்கின்றனர். ஏன்!

அவரின் மரணத்திற்காக வானம், பூமி கூட அழுகிறது. (கருத்து, அல்குர்ஆன் 44:29)

ஏகத்துவக் கொள்கை மற்றும் அது எதிர்பார்க்கும் அமலுஸ் ஸாலிஹ் எனும் நல்லறங்களுடன் வாழ்ந்த அம்மனிதர் நரகம் செல்லாமல் -இறையருளால்- நேரடியாக சொர்க்கம் செல்கிறார். இதுவல்லவா உண்மையான வெற்றி! அல்லாஹ் கூறுகிறான்:
யார் நரகை விட்டும் தூரமாக்கப்பட்டு, சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ நிச்சயமாக அவரே வெற்றி அடைந்தவராவார். (அல்குர்ஆன் 3:185)

ஆம்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதுவே உண்மையான வெற்றி!
அன்புச் சகோதர, சகோதரிகளே! நாமும் நம்முடைய வாழ்க்கையை இவ்வாறு ஏன் அமைத்துக் கொள்ளக் கூடாது?! சற்று நிதானமாக, தனிமையில் உங்கள் உள்ளத்துடன் உரையாடுங்கள்! அல்லாஹ் விரும்புவதை உங்கள் விருப்பமாகவும் அவன் வெறுப்பை உங்கள் வெறுப்பாகவும் அவனிடம் கிடைக்கும் நற்பெயரையே உங்கள் இலட்சியமாகவும் ஆக்கிக் கொள்ள நாம் ஏன் முன்வரக் கூடாது?! சிந்தியுங்கள்! சுயபரிசோதனை செய்து, செயல்படத்துவங்குங்கள்! அல்லாஹ் அப்பாதையை உங்களுக்கு நிச்சயமாக எளிதாக்குவான்!

இதோ தங்களுக்கு முன் தங்கள் ஈமான் முழுமைபெற, அதன் மூலம் இறைநேசத்தைப் பெறுவதற்கான வழிகள். அல்லாஹ் நம் அனைவருக்கும் இதன்படி செயல்பட கிருபை செய்வானாக!
ஈமானின் கிளைகள்

1) அல்லாஹ்வை நம்புவது.
2) இறைத்தூதர்களை நம்புவது.
3) மலக்குமார்களை நம்புவது.
4) அல்குர்ஆனையும் ஏனைய இறைவேதங்களையும் நம்புவது.
5) நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதே! என்ற விதியை நம்புவது.
6) உலக அழிவு நாளை நம்புவது.
7) மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை நம்புவது.
8) மரணத்திற்குப் பின் எழுப்பப்பட்டு ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும் மஹ்ஷரை நம்புவது.
9) முஃமின் செல்லுமிடம் சொர்க்கம் என நம்புவது.
10) அல்லாஹ்வை நேசிப்பது.
11) அல்லாஹ்வுக்குப் பயப்படுவது.
12) அல்லாஹ்வின் அருளில் ஆதரவு வைப்பது.
13) அல்லாஹ்வின் மிதே தவக்குல் வைப்பது.
14) நபி(ஸல்) அவர்களை நேசிப்பது.
15) நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவது.
16) இறைநிராகரிப்பை விட நெருப்பில் எறியப்படுவதே மேல்! எனும் அளவிற்கு இஸ்லாத்தை நேசிப்பது.
17) அல்லாஹ்வைப் பற்றியும் அவனது மார்க்கததைப் பற்றியுமுள்ள கல்வியை கற்பது.
18) கல்வியைப் பரப்புவது.
19) அல்குர்ஆனை கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதன் மூலம் அதனை கண்ணியப்படுத்துவது.
20) தூய்மையாக இருப்பது.
21) ஐவேளை-கடமையான -தொழுகைகளை நிறைவேற்றுவது.
22) ஜகாத் கொடுப்பது.
23) ரமலான் மாதம் நோன்பு நோற்பது.
24) இஃதிகாஃப் இருப்பது.
25) ஹஜ் செய்வது.
26) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவது.
27) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவதற்காக ஆயத்தமாவது, தயார் நிலையில் இருப்பது.
28) -அறப்போரில்- எதிரியை சந்திக்கும் போது உறுதியாக நிற்பது, புறமுதுகிட்டு ஓடாமலிருப்பது.
29) முஸ்லிம்களின் ஆட்சித் தலைவருக்கு போரில் கனீமத்தாகக் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுப்பது.
30) அல்லாஹ்விற்காக அடிமையை உரிமை விடுவது.
31) குற்றவாளி அதற்குரிய பரிகாரங்களை நிறைவேற்றுவது. (1. கொலை, 2. லிஹார், 3. ரமலான் நோன்பின் போது உடலுறவு கொள்ளல் போன்றவற்றின் பரிகாரங்கள்)
32) ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது.
33) அல்லாஹ்வின் எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது.
34) தேவையற்ற விஷயங்களிலிருந்து நாவை பாதுகாப்பது.
35) அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைப்பது.
36) கொலை செய்யாதிருப்பது.
37) கற்பைப் பேணுவது, தவறான வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்ளாதிருப்பது.
38) திருடாதிருப்பது.
39) உணவு மற்றும் பானங்களில் -ஹலால்,ஹராம்- பேணுவது.
40) மார்க்கத்திற்கு முரணான அனைத்து வீண், விளையாட்டுகளை விட்டும் தூரமாவது.
41) ஆண்கள், பட்டாடை மற்றும் கரண்டைக்கு கீழ் ஆடைகளை அணியாதிருப்பது.
42) ஹராமான பொருளாதாரத்தை உட்கொள்ளாதிருப்பது, செலவு செய்வதில் நடுநிலையை கடைபிடிப்பது.
43) மோசடி, பொறாமை போன்ற தீயபண்புகளை தவிர்ப்பது.
44) மனித கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்காதிருப்பது.
45) அல்லாஹ்வுக்காகவே -மனத்தூய்மையுடன்- நல்லறங்கள் புரிவது.
46) நல்லவைகளைச் செய்தால் மகிழ்வது, தீயவைகளைச் செய்துவிட்டால் கவலைப்படுவது.
47) பாவமன்னிப்பின் மூலம் அனைத்துப் பாவங்களையும் போக்குவது.
48) அகீகா மற்றும் (ஹஜ்ஜின் போது கொடுக்கப்படும்)ஹதீ, உழ்ஹிய்யா போன்ற இறைநெருக்கத்தைப் பெற்றுத் தரும் காரியங்களைச் செய்வது.
49) (இஸ்லாமிய)ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவது.
50) முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் இணைந்திருப்பது.
51) மக்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பது.
52) நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது.
53) நல்லவைகளிலும் இறையச்சமான காரியங்களிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருப்பது.
54) வெட்கப்படுவது.
55) பெற்றோருக்கு பணிவிடை செய்வது.
56) உறவினர்களுடன் இணைந்து வாழ்வது.
57) நற்குணத்துடன் நடப்பது.
58) அடிமை மற்றும் பணியாட்களிடம் நல்லமுறையில் நடப்பது.
59) அடிமை எஜமானுக்குக் கட்டுப்படுவது.
60) பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரின் உரிமைகளைப் பேணுவது, அவர்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பது.
61) முஸ்லிம்களை நேசிப்பது, அவர்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவது.
62) ஸலாத்திற்கு பதிலுரைப்பது.
63) நோயாளியை விசாரிப்பது.
64) முஸ்லிம்களில் மரணித்தவர்களுக்காக தொழுகை நடத்துவது.
65) தும்மியவருக்கு -யர்ஹமுகல்லாஹ் என -பதிலுரைப்பது.
66) இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் சமூகவிரோதிகளை விட்டும் தூரமாகியிருப்பது, அவர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வது.
67) அண்டை வீட்டாருடன் கண்ணியமாக நடப்பது.
68) விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது.
69) பிறரின் குறைகளை மறைப்பது.
70) சோதனைகளில் பொறுமையை மேற்கொள்வது.
71) உலக விஷயத்தில் பற்றற்று இருப்பது, உலக ஆசைகளைக் குறைத்துக் கொள்வது.
72) மார்க்க விஷயத்தில் ரோஷப்படுவது.
73) வீணான அனைத்துக் காரியங்களையும் புறக்கணிப்பது.
74) அதிகமாக தர்மம் செயF்வது.
75) சிறியவர்களுக்கு இரக்கம் காட்டுவது, பெரியவர்களை மதிப்பது.
76) பிரச்சினைக்குரியவர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது.
78) துன்பம் தரும் பொருட்களை பாதையை விட்டும் அகற்றுவது.

(குறிப்பு: மேற்கூறப்பட்ட 78 கிளைகளும் ஹதீஸ் க வல்லுனர்களில் ஒருவரான இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் ஷுஃபுல் ஈமான் -ஈமானின் கிளைகள்- எனும் நூலில் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் தொகுத்துக் தந்தவைகளில் தலைப்புகளாகும். இவைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் விரிவாகக் கற்று அதன்படி செயல்படுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.)
Special Thanks : www.islamkalvi.com via  www.koothanalluronline.com

source : http://www.koothanalluronline.com/ta/?p=335

Saturday, January 28, 2012

இத்தாவும் இல்லாத விதிமுறைகளும்




கணவனை இழந்த பெண்களும், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம் வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். இந்தக் கால கட்டமே இத்தா எனப்படும். இத்தா என்பதற்கு காத்திருப்புக் காலம், கணித்தல், எண்ணுதல், காத்திருத்தல் என்று பல்வேறு பொருள்கள் உள்ளன.
இதனை நாம் திருமறைக் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில்  பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்

கணவனை இழந்த பெண்களின் இத்தாக் காலம்.
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும் அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 2:233)

விவாகரத்து செய்யப்பட்ட பெண்களின் இத்தாக் காலம்.

விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர் களுக்கு அனுமதி இல்லை
(அல்குர்ஆன் 2:228 )

எதற்காக இத்தாக் காலத்தை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்?
கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லாவிட்டால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் கழியும் வரையிலும் மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் கால கட்டம் இத்தா’எனப்படுகின்றது.

கணவனுடன் வாழ்ந்தவள் அவனது கருவைச் சுமந்திருக்கலாம்; அந்த நிலையிலேயே அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்படையும். இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான்.

முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது குடும்பத்துக் குழந்தை இல்லை எனக் கூறி விடுவர். இதனால் தந்தை யார் என்பதே தெரியாததால் மன ரீதியான பாதிப்பு அக்குழந்தைக்கு ஏற்படும். தகப்பனிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துரிமை கிடைக்காமல் போய் விடும்.

இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள் என்று இரண்டாம் கணவன் நினைத்தால் அப்பெண்ணின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.
கருவில் குழந்தை இருப்பதை அறிய ஒரு மாதம் போதுமே! அந்த மாதத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே! நான்கு மாதம் பத்து நாட்கள் அதிகமல்லவா? என்று சிலர் நினைக்கலாம்.

இது நியாயமான கேள்வி தான். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்களைத் தவிர்க்கவே இஸ்லாம் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் காத்திருக்கச் சொல்கிறது.
ஒரு பெண் தான் முதல் மாதமே கருவுற்றிருப்பதை அறிந்து கொண்டாலும் அதை அவள் மறைக்க முயற்சிக்கலாம். (அதனால்தான் இறைவனும் கூட இவ்வாறு குர்ஆனில் கூறுகிறான்  2:228)  தான் கருவுறவில்லை என்று கூறி இன்னொருவனைத் திருமணம் செய்யலாம். நான்கு மாதம் பத்து நாட்களுக்கு இவ்வாறு கூற முடியாது. வயிறு காட்டிக் கொடுத்து விடும்.

குறைப் பிரசவமாக ஒரு குழந்தையை அவள் பெற்றெடுத்தால் அது முந்தைய கணவனுடையதாக இருக்குமோ என்று இரண்டாம் கணவன் சந்தேகப்படுவான். நான்கு மாதம் பத்து நாட்கள் கடந்த பின்பு அவன் இப்படிக் கூற முடியாது. குழந்தை இருந்தால் தான் நான்கு மாதத்தில் வெளிப்படையாகத் தெரியுமே என்று அவன் உண்மையை விளங்கிக் கொள்வான்.
இத்தகைய காரணங்களால் தான் பெண்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களது எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவளது குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான்.

மாதவிடாய் அற்றுப் போன பெண்களின் இத்தாக் காலம்.
உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள்.
(அல் குர்ஆன் 65:4)

கர்ப்பிணிப் பெண்களின் இத்தாக் காலம்.
கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தக் காலக் கெடுவிலிலி-ருந்து கர்ப்பிணிப் பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள்.

கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான் (அல் குர்ஆன் 65:4)
தம் கணவர் இறந்த சில நாட்களுக்குப் பின் சுபைஆ அல் அஸ்லமிய்யா (ரலி) அவர்கள் பிரசவித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று மறுமணம் புரிந்து கொள்ள அனுமதி கோரினார்கள். அப்பொது நபி (ஸல்) அவருக்கு அனுமதி அளித்ததை அடுத்து (அவர் ஒருவரை) மணந்து கொண்டார்.
அறிவிப்வர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)
நூல் : புகாரி (5320)

கணவன் மரணிக்கும் போது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது.
கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம்.
இவ்வசனத்திலிருந்து இந்தச் சட்டத்தை அறியலாம்.

கொடுமைகளும் மூடநம்பிக்கைளும்.
இத்தாக் காலம் என்பது மேற்கூறப்பட்ட நிலையிலுள்ள பெண்கள் மறுமணம் செய்வதற்காக உள்ள கால கட்டமாகும். அதாவது மேற்கூறப்பட்ட கால கட்டங்கள் நிறைவு பெற்றவுடன் தான் அவர்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்.

இக்கால கட்டங்களில் அவர்கள் தங்களுடைய அலங்காரங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
கணவன் இறந்த பின் அவனது மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாட்களில் சுர்மா இடவோ மணப் பொருட்களை பூசவோ சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப் பட்ட ஆடைகளை அணியலாம்.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி )
நூல் : புகாரி (313)

ஆனால் இன்றைய கால கட்டத்தில் நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் இத்தா என்ற பெயரில் பெண்களுக்கு எண்ணற்ற கொடுமைகள் இழைக்கப் படுகிறது.

பெண்களை சூரிய ஒளி கூட படாத வகையில்  இருட்டறையில் அடைத்து வைத்து விடுகின்றனர். சில ஊர்களில் பாய்களால் அறை அமைக்கின்றனர். அதில் சிறிய ஓட்டைகள் இருக்கும். அவர்கள் வானம் பார்க்கக்கூடாது; வெளிச்சம் பட்டுவிடக்கூடாது; யாரையும் பார்க்கக் கூடாது என்பதற்காக அந்த ஓட்டைகளைக் கூட சாணியைப் பூசியும் சிமிண்ட் போன்ற பொருட்களை பூசியும் அடைத்து விடுகின்றனர். இதற்கு வயதான பெண்களும் விதிவிலக்கல்ல.
அவர்கள் எந்த ஆண்களையும் பார்க்கக் கூடாதாம், அதற்காகத்தான் இவ்வாறெல்லாம் செய்கின்றனர்.

சில ஊர்களில் ஆண் குழந்தைகள் கூட அந்த அறைக்குள் செல்வது கூடாதாம். இதை விட மிகக் கொடுமை என்னவென்றால் கர்ப்பிணிப் பெண்கள் கூட அந்த அறைக்குள் செல்லக் கூடாதாம். ஏனென்றால் அப்பெண்களின் வயிற்றில் ஆண் குழந்தை இருக்கலாமாம். அது அப்பெண்ணை பார்த்து விடக் கூடாதாம். சில ஊர்களில் பெற்றெடுத்த மகன் கூட இந்த அறைக்குள் தன்னுடைய தாயைப் பார்ப்பதற்கு தடை உள்ளது.

சமீபத்தில் மேலப்பாளையத்தில் ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டார். மனைவி இத்தா இருப்பதாகக் கூறி, எந்த ஆணின் கண்ணிலும் பட்டு விடாமல் இருந்து வருகின்றாள். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்படுகின்றது. மருத்துவரிடம் சென்று காண்பித்தால் சரி செய்து விடலாம். ஆனால் இத்தா இருக்கும் போது டாக்டரிடம் செல்வது ஹராம் என்ற தவறான நம்பிக்கையால், அப்பெண்ணை அவரது உறவினர்கள் டாக்டரிடம் காட்டாமலேயே விட்டு விடுகின்றார்கள். இறுதியில் நோய் அதிகமாகி டாக்டரிடம் செல்லும் போது அப்பெண் மரணித்து விட்டார். மார்க்கம் விதிக்காத கட்டுப்பாடுகளைத் தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொண்டதால் ஓர் உயிர் அநியாயமாகப் பறி போய் விட்டது.

சில ஊர்களில் கணவன் இறந்ததை அந்த வருடம் முழுவதும் துக்கமாகக் கொண்டாடுவார்கள். இரு பெருநாட்களுக்கும் புதுத் துணிமணிகள் எடுத்து அணிய மாட்டார்கள்.

நான்கு மாதம் பத்து நாட்கள் என்று கணக்கிட்டு அவர்களை ஓர் அறையில் அடைத்து விடுவார்கள்.
மாற்று மத சமுதாயங்களில் கணவனை இழந்த பெண்கள் மதிக்கப் படும் முறையை விட மோசமாக இன்றைக்கு இத்தா என்ற பெயரில் இஸ்லாமிய பெண்கள் இழிவு படுத்தப்படுகின்றனர்.
இத்தா காலகட்டத்தில் உள்ள பெண்களை இருட்டறையில் அடைத்து வைக்க வேண்டும் என்பதும், அவர்கள் எந்த ஒரு ஆணையும் பார்க்கக் கூடாது என்பதும் திருமறைக் குர்ஆனின் வழிகாட்டுதலுக்கும் நபி வழிக்கும் மாற்றமானதாகும்.

பின்வரும் வசனத்தை கவனித்துப் படியுங்கள். இத்தா இருக்கக் கூடிய பெண்களிடம் ஆண்கள் பேசலாம் அதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்!

உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 2:235)
நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! என்ற வாசகத்திலிருந்து நல்ல சொற்களைக் கூற வேண்டுமென்றால் அவர்களை நேரில் தான் கூற முடியும்.
இத்தா என்பது தலாக் விடப்பட்ட பெண்ணோ, கணவனை இழந்த பெண்ணோ மறுமணம் செய்து கொள்வதற்குரிய இடைவெளி தானே தவிர அவர்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்லக்கூடாது யாரையும் பார்க்கக் கூடாது பேசக் கூடாது என்றெல்லாம் கூறுவது இஸ்லாத்திற்கு மாற்றமான நடைமுறையாகும்.

என் தாயின் சகோதரி மணவிலக்கு செய்யப்பட்டார். அவர் (இத்தா காலகட்டத்தில் இருந்த போது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே என் தாயின் சகோதரி நபி (ஸல்) அவர்களிடம் வந்(து தெரிவித்)த போது நபி (ஸல் ) அவர்கள், ஆம் நீ (சென்று) உமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக் கொள். ஏனெனில் (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக்கூடும் அல்லது ஏதேனும் நல்லறம் செய்யக் கூடும்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2972)

இத்தா இருந்த பெண்ணை ஒருவர் வெளியே செல்லக் கூடாதென கண்டிக்கின்றார். அவரும் ஒரு ஆண்தான். மேலும் அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்கின்றார்கள். நபியவர்களும் ஆண் தான்.

எனவே இத்தா இருக்கக் கூடிய பெண்கள் இருட்டறையில் தான் கிடக்க வேண்டும்  என்பது முழுக்க முழுக்க மார்க்கத்திற்கு மாற்றமானதாகும். ஏனென்றால் நபியவர்களின் காலத்தில் ஒரு பெண் தன்னுடைய வீட்û.ட விட்டு வெளியே சென்று நபியவர்களிடம் வெளியே செல்வதற்கும் அனுமதி கேட்கிறார்கள். நபியவர்களும் அனுமதி வழங்கி விடுகின்றார்கள்.

இவற்றையெல்லாம் இன்றைய நம்முடைய இஸ்லாமிய சமுதாயத் தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்றைக்கு தவ்ஹீத் வாதிகள் கூட தங்களுடைய வீட்டுப் பெண்களுக்கு இஸ்லாமிய முறைப்படி இத்தா காலத்தை நடைமுறைப்படுத்துவதை அனுமதிப்பதில்லை.

மேலும் இத்தா என்ற பெயரில் அமைக்கப்படும் அந்த இருட்டுச் சிறையிலிருந்து வெளிவரும் போதும் அறியாமைக் காலத்தைப் போன்று எண்ணற்ற மூட நம்பிக்கைகள் நிறைந்து காணப்படுகின்றன்.
சில ஊர்களில் இத்தாவிலிருந்து வெளியே வரக்கூடிய நாளில் காலை நேரத்தில் யாரும் பார்க்காத அதிகாலை நேரத்திலேயே ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள நீர் நிலைகள் வயல் வெளிகள் தோப்புகள் போன்ற இடங்களுக்கு சென்று விடுவார்கள். அங்கு நன்றாக சமைத்து சாப்பிட்ட பின்பு இரவு நேரத்தில் யாரும் பார்க்காதவாறு வீட்டிற்கு வந்து இருட்டறை ஜெயில் வாழ்க்கையை முடித்துக் கொள்வார்கள்.

இன்னும் சில  ஊர்களில் அந்த இருட்டறையிலிருந்து வெளியே வரும்போது வேறு யாரையும் பார்ப்பதற்கு முன்னால் முதலில் குர்ஆனைப் பார்த்து விட்டு வெளியே வருவார்கள். இன்னும் ஊருக்கு ஊர் வித்தியாசமாக பல்வேறு முறைகள் நிலவி வருகின்றன்.
சில ஊர்களில் அவர்களை துணி துவைத்தல், பாத்திரம் பூசுதல் போன்ற ஒரு வேலையைக் கூட செய்ய விடமாட்டார்கள். இத்தாவிலிருந்து வெளியே வரும்போது புதுச் சேலையைக் கட்டிக் கொண்டு ஊரிலுள்ள பெரிய தர்காவிற்குச் சென்று ஃபாத்திஹா ஓதி நேர்ச்சை செய்து அதை முடிப்பதும் உண்டு.

இவையெல்லாம் முழுக்க முழுக்க மார்க்கத்திற்கு மாற்றமான மூட நம்பிக்கைகளாகும். இவையெல்லாம கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டிய, தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.
நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார்கள். பிறகு "சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே  அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத எந்த ஒரு நிபந்தனையும் செல்லாததாகும். நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே. அல்லாஹ்வின் தீர்ப்பே (ஏற்று) பின்பற்றத்தக்கதாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியும் கட்டுப்படுத்தும் சக்தியும் வாய்ந்ததாகும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (2563)

எனவே இது போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறைகளையும் மூடநம்பிக்கைகளையும் தவிர்த்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த முறைப்படி நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்வோமாக.

பெண்களின் விவாகரத்து உரிமை.

கணவனைப் பிடிக்காத நிலையில் ஒரு மனைவி அவனிடமிருந்து பிரிந்து மறு வாழ்வு அமைத்துக் கொள்ள இஸ்லாம் பல உரிமைகளை வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்று தான் குல்உ எனப்படுவதாகும்.

இந்தச் சட்டம் மத்ஹபுகளில் இருந்தாலும் கூட மத்ஹபுகளைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்வோர் இதை நடைமுறைப் படுத்துவதில்லை.

ஒரு பெண் தன் கணவரோடு வாழப் பிடிக்காமல் தன்னைப் பிரித்து வைக்குமாறு அந்தப் பகுதியின் ஜமாஅத்தாரிடம் முறையிட்ட போது, அவர்கள் ஹனபி மத்ஹபின் படி கணவன் தலாக் விட்டால் தான் பிரிய முடியும் என்று கூறி மறுத்து விட்டனர்.  அந்தப் பெண் தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகி மார்க்கத் தீர்ப்பு பெற்று கணவனைப் பிரிந்தார். ஆயினும் கணவன், நான் தலாக் விடவில்லை என்பதால் என் மனைவி என்னோடு தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது கணவன், மனைவி இருவரும் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விவாக ரத்து உரிமை சமுதாயத்தில் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாமல் இருப்பதால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிட்டுள்ளோம். எனவே இந்த குல்உ எனப்படும் பெண்களின் விவாக ரத்து உரிமையைப் பற்றி இங்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

குல்உ என்றால் என்ன?
1. ஒரு பெண்ணுக்குத் தனது கணவனைப் பிடிக்கவில்லை என்றால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடமோ அல்லது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்தால் ஆட்சித் தலைவரிடமோ முறையிட வேண்டும்.
2. அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராகப் பெற்ற பொருட்கள் அனைத்தையும் கணவனிடம் திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்குக் கட்டளையிட வேண்டும்.
3. அந்த மஹரைப் பெற்றுக் கொண்டு உடனே அவளைப் பிரிந்து விடுமாறு அந்தக் கணவருக்கு தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படா விட்டாலும் தலைவர் அந்தத் திருமணத்தை ரத்து செய்வார்.
4. மஹராகக் கொடுத்ததை விட எதையும் அதிகப்படியாக கணவன் கேட்க முடியாது.
5. கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை.
6. கணவனே தலாக் கூறும் போது மூன்று மாதவிடாய் காலத்துக்குள் அவளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை இருப்பதைப் போல் குல்உ செய்து பிரியும் போது திரும்ப அழைக்க முடியாது.
7. தலாக் விடப்படும் போது மூன்று மாதவிடாய் வரை அவள் மறு மணம் செய்யக் கூடாது. ஆனால் குல்உ அடிப்படையில் பிரியும் போது ஒரே ஒரு மாதவிடாய் வரும் வரை அவள் மறுமணம் செய்யக் கூடாது. அதன் பிறகு அவள் மறுமணம் செய்யலாம்.
8. இவ்வாறு பிரிந்த பின் இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

இவை தான் குல்உ என்பதன் விதிமுறைகளாகும். முஸ்லிம் பெண்களில் பெரும்பாலோருக்கும், சமுதாயத் தலைவர்களுக்கும் இந்தச் சட்டங்கள் தெரியாததாலும், கல்லானலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற போலித்தனத்தில் அவர்கள் ஊறிப் போய் விட்டதாலும் பெண்கள் இன்று கொடுமைப் படுத்தப் படுகின்றனர்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ்(ரலி)யின் மனைவி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்'' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி "சரி'' என்றார். உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் "தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு'' என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி),
நூல்கள்: புகாரி 5273, நஸயீ 3409

ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஜமீலா எனும் தம் மனைவியை அடித்தார். அவரது கை ஒடிந்து விட்டது. இதைக் கண்ட அப்பெண்மணியின் சகோதரர் அன்றைய சமுதாயத் தலைவரான நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸை அழைத்து வரச் செய்து, "அவள் உமக்குத் தர வேண்டியதை(மஹரை)ப் பெற்றுக் கொண்டு அவளை அவள் வழியில் விட்டு விடுவீராக!'' என்றார்கள். அவர் "சரி'' என்றார். அப்பெண்மணியிடம் "ஒரு மாதவிடாய்க் காலம் வரை (திருமணம் செய்யாமல்) பொறுத்திருக்குமாறும் தாய் வீட்டில் சேர்ந்து கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ருபய்யிஃ(ரலி)
நூல்: நஸயீ 3440

இந்த ஹதீஸ்களில் அந்தப் பெண்மணி தன் கணவரைப் பற்றி எந்தக் குறையையும் கூறவில்லை. மாறாக அவரது நடத்தையையும், நற்பண்புகளையும் புகழ்ந்தே கூறுகின்றார். தான் கணவரை விட்டுப் பிரிய விரும்புவதற்கு எந்தக் காரணத்தையும் கூறவில்லை. இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறைவனுக்கு மாறு செய்து விடுவேனோ என்று அச்சமாக உள்ளதையே காரணம் காட்டுகின்றார்.
கணவனைப் பிடிக்காது பிரிந்து செல்ல விரும்பும் மனைவி தெளிவான காரணம் எதையும் கூற வேண்டியதில்லை என்பதையும், தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினாலே போதுமானது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
கணவன் தலாக் கூறினால் தான் குல்உ நிறைவேறும் என்று சிலர் கூறுகின்றர். ஆனால் இது ஏற்கத்தக்கதல்ல.

கணவனால் கொடுமை படுத்தப்படும் பெண் அவனிடமிருந்து பிரிய விரும்புகின்றாள். இந்த நிலையில் அவன் மறுக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் தலாக் விட்டால் தான் அவள் பிரிய வேண்டும் என்றால் காலமெல்லாம் அவள் கொடுமைப் படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கொடுமைகள் நிகழும் போது அதைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ள தலைவரும் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து பெண்களுக்கு அக்கிரமம் செய்யப்படுவதை இஸ்லாம் அனுமதிக்குமா? அநியாயத்தையும் அக்கிரமத்தையும் எதிர்த்துப் போராடுமாறும் முடியுமானால் கையால் தடுக்க வேண்டும் எனவும் கூறும் இஸ்லாம் இந்த அக்கிரமத்தை அனுமதிக்குமா? இந்தக் கோணத்தில் பார்த்தாலும் குல்உ என்பதற்கு அந்தக் கணவனின் சம்மதமோ, அவனது தலாக்கோ தேவையில்லை என்பது தெளிவாகின்றது.

இஸ்லாம் திருமணத்தை ஒரு ஒப்பந்தம் என்று கூறுகின்றது.

"உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?''
(அல்குர்ஆன் 4:21)
"பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன''
(அல்குர்ஆன் 2:228)

திருமணத்தை முறித்துக் கொள்ள கணவனுக்கு இருப்பது போன்று மனைவிக்கும் உரிமை இருப்பதை இந்த வசனங்கள் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றன. கணவன் தலாக் விட்டால் தான் அவள் பிரிய முடியும் என்றால் பெண்ணுக்கு இந்த உரிமை வழங்கப் பட்டதில் என்ன அர்த்தமிருக்க முடியும்?

இது போன்ற காரணங்களால் கணவன் தலாக் கூறினால் தான் அவளால் பிரிய முடியும் என்பதை ஏற்க முடியவில்லை. எவ்வளவு பெரிய இமாம்கள் அந்தக் கருத்தைக் கூறியிருந்தாலும் அதைத் தூக்கி எறிய வேண்டியது தான்.

பெரும் மார்க்க அறிஞர்கள் எனப்படும் பலரும் இந்த விஷயத்தில் சறுக்கியுள்ளனர். பெண்களின் நிலையிலிருந்து சிந்தித்தால் இதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
குல்உ தொடர்பான மற்ற ஆதாரங்களைக் காண்போம்.

இப்னு மாஜாவில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் 2332வது ஹதீஸில், "அவரது தோட்டத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அதை விட அதிகமாகப் பெற்றுக் கொள்ளக் கூடாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
கொடுத்த மஹரை விட வேறெதனையும் அந்தக் கணவன் கேட்க முடியாது. தலைவரும் வற்புறுத்த முடியாது என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.

"ஒரேயடியாக அவளைப் பிரிந்து விடு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து திரும்ப அழைக்கும் உரிமை கணவனுக்கு கிடையாது என்பதும் தெளிவாகின்றது.

ஆக பெண்கள் தங்கள் கணவனிடமிருந்து பிரிவதாக இருந்தால் ஜமாஅத்தில் முறையிட வேண்டும்.  ஜமாஅத் தலைவர் அந்தத் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆண் சார்பு நிலையிலிருந்து ஜமாஅத்தினர் விடுபட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைச் செயல்படுத்த வேண்டும்.

கணவனைப் பிடிக்காமல், பிரியவும் வழி தெரியாமல் வாழ வெட்டிகளாகப் பிறந்த வீட்டில் கண்ணீர் வடிக்கும் அபலைப் பெண்களின் உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும். இஸ்லாம் வழங்கியுள்ள இந்த உரிமையை மறுப்பதன் மூலம் அவர்கள் விபச்சாரம் போன்ற தகாத உறவுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு நியாயத்தை மறுத்த மொத்த சமுதாயமும் அந்தக் குற்றத்தில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படும்.

கணவன் தலாக் விடாத வரை அந்த உறவை ரத்துச் செய்ய முடியாது என்று அஞ்சும் ஜமாஅத் தலைவர்களுக்காக ஒரு முக்கியமான ஹதீஸைச் சமர்ப்பிக்கிறோம்.

அப்துல்லாஹ்வுடைய மகள், ஸாபித் என்பாருக்கு மனைவியாக இருந்தார். அவர் அப்பெண்ணுக்கு ஒரு தோட்டத்தை மஹராக வழங்கியிருந்தார். (அந்த வழக்கு வந்த போது) "உனக்கு அவர் தந்துள்ள தோட்டத்தைத் திருப்பிக் கொடுக்கிறாயா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "ஆம். அதை விட அதிகமாகவும் கொடுக்கிறேன்'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதிகமாக வேண்டாம். அவரது தோட்டத்தை மட்டும் கொடு'' என்றார்கள். அப்பெண் சரி என்றதும், ஸாபிதின் சார்பாக நபி (ஸல்) அவர்களே தோட்டத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பு ஸாபிதுக்குத் தெரிய வந்த போது, "அல்லாஹ்வின் தூதருடைய தீர்ப்பை நான் ஏற்கிறேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஸ்ஸுபைர்
நூல்: தாரகுத்னீ 39

கணவனின் தலாக்கைப் பெறாமல் நபியவர்களே மஹரைப் பெற்றுக் கொண்டு ரத்து செய்கின்றார்கள். இந்தச் செய்தி சம்பந்தப்பட்டவருக்கே பிறகு தான் தெரிகின்றது என்றால் ஜமாஅத் தலைவருக்கு உள்ள உரிமையையும் கடமையையும் தெளிவாக அறிய முடிகின்றது.
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையினால் மாற்றார்கள் இஸ்லாத்தை விமர்சிப்பது ஒரு புறமிருக்க, நமது சமுதாயத்துப் பெண்களில் விபரமறிந்தவர்களும் இஸ்லாத்தை விமர்சிக்க இடமளித்து விடக் கூடாது.

பெண்களுக்கு உள்ள இந்த உரிமையைப் பெண்கள் அறிவதற்கு ஏற்பாடு செய்வதும் ஜமாஅத் தலைவர்களுக்கு இந்தச் சட்டம் பற்றி விளக்குவதும் தவ்ஹீத் சகோதரர்களின் கடமைகளில் ஒன்றாகும்.

பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படா விட்டால் அதனாலும் பல தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.

கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்பதால் கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.

பெண்கள் ஸ்டவ் வெடித்துச்  செத்தால், விஷம் கொடுக்கப்பட்டு கணவர்கள் கொல்லப்படுகிறார்கள். நன்றாகத் தான் படுத்தார். காலையில் பிணமாகி விட்டார் என்று கூறப்படுவதில் கனிசமானவை மனைவியரால் செய்யப்படும் கொலைகளாகும். சமையல் அவர்கள் கையில் இருப்பதால் எளிதாகக் கதையை முடிக்கிறார்கள்.

அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்கின்றனர். கணவனிடமிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, தனக்கு விருப்பமானவனைச் சட்டப்படி மணந்து கொள்ள வழியிருந்தால் இது போன்ற கொடூரம் நடைபெறாது.
எனவே தான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாகரத்துச் சட்டத்தை இஸ்லாம் மிக மிக எளிமையாக்கியுள்ளது.

ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

நன்றி: முஹம்மது அலீ ரஹ்மானீ
ஏகத்துவம் ஆகஸ்ட் 2005 

Friday, January 27, 2012

ஜும்ஆ நாளின் மகத்தான பொக்கிஷங்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வாபரக்காத்துஹு...
ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அவனது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக! இஸ்லாமிய சமூகத்துக்கு அல்லாஹ்வை வணங்கக்கூடிய புனித திருநாளாக வெள்ளிக்கிழமைதினம் இருக்கின்றது. இஸ்லாமிய சமூகத்தை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான். புனிதம் மிக்க இந்த நாளை சிலர் தூக்கத்திலும், பிரயாணத்திலும், விளையாட்டிலும் கழிப்பதோடு பெண்கள் கடைத்தெருக்களிலும், வீடு வாசல் சுத்தம் செய்வதிலும் ஈடுபடுகின்றனர். இந்த நாளின் மகத்துவத்தையும், சிறப்பையும் அறியாதவர்களாக கவனமின்மையாக இருக்கின்றார்கள். இவற்றை விட்டுவிட்டு இந்த நாளின் சிறப்பையும், நன்மையையும், மகத்துவத்தையும் அறிந்து இறைவனை வழிபடுவதிலும், அதிகம் திக்ர் செய்வதிலும் அதிகமதிகம் பிரார்திப்பதிலும் நபி (ஸல்) அவர்கள் மீது  ஸலவாத்துச் சொல்வதிலும் ஈடுபட முயல வேண்டும்.

1) மாறி மாறி வரக்கூடிய திருநாள்: வெள்ளிக்கிழமையின் சிறப்புக்களில் ஒன்றுதான் இந்நாளில் தனித்து நோன்பு நேற்பது  தடுக்கப்பட்டுள்ளது, யூதர்களுக்கும், கிறிஸதவர்களுக்கும் மாற்றமாக நடப்பதற்காக முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை, குறிப்பாக ஒரு அடியான் இந்த நாளில் தொழுவதிலும், பிரார்த்திப்பதிலும், இவை அல்லாத வணக்கங்களிலும் ஈடுபட்டு இறைவனை வழிப்பட வேண்டும்.

2) நன்மைகள் அதிகமாக  உள்ள நாள்: சுவர்க்கத்தில் இருக்கின்ற இறைவிசுவாசிகளை (முஃமின்களை) இத்தினத்தில் இறைவன் பார்க்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்: “அவர்கள் விரும்புவது அதில் அவர்களுக்கிருக்கிறது. மேலும் (அதைவிட) அதிகமானதும் நம்மிடம் இருக்கிறது” அனஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் “ஒவ்வொரு வெள்ளியன்றும் இறைவன் அவ்ர்களை (முஃமின்களை) பார்வையிடுகின்றான்”(ஆதாரம்: இப்னு பத்தா, அபூ நயீம்) 

3) நாட்களிலே சிறந்த நாள்: நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும்” (ஆதாரம்: முஸ்லிம்) 

4) மறுமை நாள்  நிகழக்கூடிய நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்” (ஆதாரம்: முஸ்லிம்) 

5) பாவங்கள் மன்னிக்கப்படும் நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குழித்து சுத்தம் செய்துகொண்டு, தலையில் எண்ணை தெய்த்து,வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு பின்னர் பிரரை கடந்து செல்லாமல்  பள்ளியினுல் நுழைந்து தனக்கு கடமையான தொழுகையை தொழுகின்றாரோ அவரது  இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்”(ஆதாரம்:புகாரி)

6) ஜும்-ஆவுக்கு நடந்து செல்வதற்குறிய நன்மை: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் ஜும்-ஆதினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து, வாகனத்தில் ஏறாமல், ஜும்-ஆவுக்காக நடந்து சென்று, இமாமுக்கு அருகாமையில் அமர்ந்து, அவர் சொல்வதை செவிமெடுக்கின்றாரோ அவர் நடந்து சென்ற ஒவ்வொரு எட்டுக்கும், நின்று வணங்கிய, நோன்பு நோற்ற  நன்மை கிடைக்கும்” (ஆதாரம்: அபூதாவூத்)

7) இரண்டு வெள்ளிக்கிழமை மற்றும் மூன்று நாட்களுக்கு இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் குளித்து ஜும்ஆவுக்குச் சென்று தொழுதுவிட்டு, இமாம்  ஜும்ஆவை  முடிக்கும் வரை மெளனமாக இருந்துவிட்டு ,அவருடன் தொழுகின்றாரோ அவருக்கு இரண்டு ஜும்ஆவுக்கும் மேலதிகமாக மூன்று நாட்களுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்: முஸ்லிம்) 

8) ஜும்ஆ தினத்தில் அல்லது  அன்று இரவில் மரணிப்பவரது மரணம் நல்ல மரணத்தின் அடையாளங்களில் நின்றும் ஒன்றாகும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் ஜும்ஆ தினத்தில் அல்லது அன்று இரவில் மரணிக்கின்றாரோ அவர் மண்ணறை வேதனையை விட்டும் காப்பாற்றப்டும்” (ஆதாரம்: அஹ்மத்) 

வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்: 

1) நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சுபஹ் தொழுகையில் அத்தியாயங்களான அஸ் ஸஜ்த, அல் இன்ஸான் என்ற இரண்டையும் ஓதுபவராக இருந்தார்கள். இவ்வத்தியாயங்களில் மனிதனின் பிறப்பு மற்றும் கப்ரிலிருந்தும், மறுமை நாளிலும் எழுப்பப்படுவன சம்பந்தமான விஷயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2) ஜும்ஆவுக்கு நேரத்தோடு செல்வது: இந்த விஷயத்தில் முஸ்லிங்கள் அதிகம் பொடுபோக்காக இருக்கின்றனர். வெள்ளிக்கிழமை காலையில் சிலர் தூங்கிக் கொண்டும், இன்னும் சிலர் ஜும்ஆ ஆரம்பமான பின்னரும், மேலும் சிலர் இமாம் ஜும்ஆவுக்கு மின்பருக்கு ஏறுவதற்கு ஒரு சில நிமிடத்துக்கு முன்னருமாகவே செல்கின்றனர். இதில் கூடிய கவனம் செலுத்தி வெள்ளிக்கிழமை தினத்தில் நேரத்தோடு பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டும்.

3) இத்தினத்தில் அதிகமாக நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்ல வேண்டும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களிடத்தில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும். அத்தினத்தில் தான் நபி ஆதம் (ஆலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதிலேதான் அவர் மரணித்தார், அதிலேதான் மறுமை நாள் நிகழும், மனிதன்  விசரனைக்காக மீண்டும் எழுப்பப்படுவான். இத்தினத்தில் அதிகமதிகம் என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள்  சொல்லக்கூடிய ஸலவாத்து என்னிடத்தில்  எடுத்துக் காட்டப்படும், நபிமார்கள் உடலை  பூமி உண்பதை (அழிப்பதை) விட்டும்  அல்லாஹ் ஹராமாக்கினான்” (ஆதாரம்: அஹ்மத்)

4) ஜும்ஆ தினத்தில் குளிப்பது சுன்னத்தாகும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு செல்பவராக இருந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) பல் துலக்கி, வாசனை திரவியங்களை தடவி, அழகான ஆடையை அணிந்து கொள்வது சுன்னத்தாகும்:இந்த விஷயத்தில் மனிதர்கள் பொடுபோக்காக இருக்கின்றனர். இதற்கு மாற்றமாக திருமண வைபவங்களுக்கும், விழாக்களுக்குமாக அழகான ஆடைகளை அணிந்து செல்லக்கூடிய முஸ்லிம்கள் நபிகளார் காட்டித்தந்த வாராந்திர திருநாளாகிய வெள்ளிக்கிழமை தினத்தில் கவனமின்மையாக இருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குளித்து, பல் துலக்கி, தன்னிடம் இருக்கின்ற வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு, தன்னிடம் இருக்கின்றவற்றில் நல்ல ஆடையை அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்கு சென்று, பள்ளியில் இருக்கின்ற மனிதர்களை கடந்து செல்லாமல் தன்னால் முடியுமான அளவு தொழுதுவிட்டு மெளனமாக இருந்து இமாம் சொல்வதை சிறந்த முறையில் செவிமெடுத்துவிட்டு தொழுகை முடியும் வரை இருக்கின்றாரோ அவருடைய முந்தைய வெள்ளிக்கிழமைக்கும் இந்த வெள்ளிக்கிழமைக்கும் இடைப்பட்ட சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்: அஹ்மத்)

6) அத்தியாயம் கஃபை ஓதுவது சுன்னத்தாகும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் வெள்ளிகிழமை தினத்தில் அத்தியாயம் கஃபை ஓதுகின்றாரோ அவருக்கு இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடையில் பிரகாசம் கிடைக்கும்” (ஆதாரம்: ஹாகிம்)
இந்த அத்தியாயத்தை பள்ளிவாசலில் மாத்திரம்தான் ஓத வேண்டிய அவசியமில்லை! வீட்டில் ஓதினாலும் போதுமானதாகும்.

7) இமாம் பிரசங்கத்தை நிகழ்த்தும் போது அதனை சிறந்த முறையில் செவிமெடுக்க அதனை விளங்கி பிரயோஸனம் அடைய வேண்டும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இமாம் பிரசங்கத்தை நிகழ்த்தும் போது ஒருவர் தனது சகோதரனுக்கு வாயை மூடு என்று கூறினால் அவர் தனது ஜும்ஆவை வீனாக்கிவிட்டார்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

8) மனிதர்களின் பிடரியை கடந்து செல்வதை விட்டும், தொழுகையாளியை நோவினை செய்வதை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: நபி (ஸல்) அவர்கள் பிரசங்கத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒருவர் மனிதர்களின் பிடரியை கடந்து சென்று கொண்டிருந்தார்கள். உடனே நபியவர்கள் அவரைப் பார்த்து “உக்கார்ந்து விடுங்கள். நிச்சயமாக நீங்கள் அவர்களை நோவினை செய்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள்.(ஆதாரம்: அஹ்மத்) பெரும்பாலும் பள்ளிவாசலுக்கு பிந்திவருபவருக்கே இவ்வாரான சந்தர்ப்பம் நிகழும்.

9) ஜும்-ஆ தொழுகை முடிந்து விட்டால் தொழுகைக்கு பின்னால் ஓதக்கூடிய துஆக்களை ஓத வேண்டும்; பின்னர் பள்ளிவாசலில் 4 ரக்அத்துக்கள் சுன்னத்து தொழுது கொள்ளவேண்டும். வீட்டில் தொழக்கூடியவராக இருந்தால் பள்ளிவாசலில் இரண்டும், வீட்டில் இரண்டும் தொழுது கொள்ளவேண்டும்.

சகோதரர்களே! இத்தினத்தின் சிறப்புக்களையும் நபியவர்களின் வழிமுறைகளையும் இத்தினத்தில் நடந்து கொள்ளவேன்டிய ஒழுங்குமுறைகளையும் அறிந்த நாம், இதனது முழுமையான சிறப்பையும் நன்மையையும் அடைய இறைவன் அருள் புரிவானாக! இறைவனிடத்தில் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய அந்த நேரத்தை அடைவதற்கு இறைவன் அருள் புரிவானாக!

நாம் அனைவரும் இறைவனை அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சி அவனை மாத்திரமே வணங்குவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!